Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவுடன் மோதலா?: சீனு ராமசாமி விளக்கம்

29 செப், 2019 - 14:00 IST
எழுத்தின் அளவு:
seenu-ramasamy-about-clash-with-ilayaraja

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் மாமனிதன். யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இளையராஜா பாடல்களுக்கு இசை அமைக்கிறார். யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் இளையராஜாவையும், வைரமுத்துவையும் இணைக்க சீனு ராமசாமி முயற்சி செய்தார். இதுகுறித்து அவர் வெளிப்படையாக பேசி வந்தார். இது இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை. என்றாலும் மகன் படம் என்பதால் எதுவும் சொல்லாமல் ஒரு மணிநேரத்தில் 5 பாடல்களுக்கு இசை அமைத்து கொடுத்து விட்டு வெளியேறி விட்டதாக கூறப்பட்டது.


இதுகுறித்து சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


நான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன் பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம். படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார். படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு "உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல" அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான்.


1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார் .அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார்.


படத்தில் பாடல்கள் என்று வந்த போது பழனி பாரதிக்கு கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம் என்றேன் யுவன் தரப்பில் பா. விஜய் என்றார்கள். நான் சம்மதித்தேன். ரெக்கார்டிங் தருவாயில் "பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன்.


இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4வது படம். இசைஞானியுடன் பணி புரியும் முதல் படம் . மாமனிதன் எனக்கு 7வது படம். இளையராஜா அவர்கள் மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தை கதாநாயகன் வாழும் ஊராக படம் பிடித்திருக்கிறேன். இளையராஜா அவர்களின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன்.


என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான் யாரையும் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை.என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய். நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம்.தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிகிறோம், நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமென கருதுகிறேன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் சீனு ராமசாமி கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கதாசிரியர் மகரிஷி காலமானார்கதாசிரியர் மகரிஷி காலமானார் ரஜினி, கமலுக்கு அரசியல் வேண்டாம் என்று சொன்னது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் ரஜினி, கமலுக்கு அரசியல் வேண்டாம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in