Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தியேட்டர் ஆபரேட்டர் ஆசையை நிறைவேற்றிய மோகன்லால்

28 செப், 2019 - 16:29 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-fan

கேரளாவில் சேர்தலா என்கிற பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர், கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக சினிமா தியேட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் மோகன்லாலின் தீவிர ரசிகரும் கூட... மோகன்லாலின் அறிமுக படத்தில் இருந்து தற்போது வரையிலான அவரது படங்களை தியேட்டர்களில் திரையிடும் வாய்ப்பு பெற்ற இவர் ஒரு முறையாவது மோகன்லாலை சந்தித்து விட வேண்டும் என்கிற தனது விருப்பத்தை சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வெளிப்படுத்தியிருந்தார்.

மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னி கிருஷ்ணன் என்பவரின் கவனத்திற்கு இவரது நீண்ட நாள் ஏக்கம் தெரியவந்தது. இதையடுத்து மோகன்லால் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்கு கோபாலகிருஷ்ணனை அழைத்துச் சென்ற உன்னி கிருஷ்ணன், மோகன்லாலுடன் அவருக்கான முதல் சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.

தனக்கு இப்படி ஒரு ரசிகர் இருக்கிறார் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்ட மோகன்லால், ரொம்பவே மகிழ்ந்து போய் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் விஷயங்களை கேட்டறிந்தாராம். மோகன்லால் நடித்த படங்களிலேயே சித்ரம் என்கிற படம்தான் தனக்கு ரொம்பவே பிடித்த படம் என்று கூறியுள்ளார் கோபாலகிருஷ்ணன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி படத்தை பாராட்டி ரசிகர்களிடம் திட்டு வாங்கும் ராம்கோபால் வர்மாசிரஞ்சீவி படத்தை பாராட்டி ... வாரிசு இயக்குனர்களை அறிமுகப்படுத்தும் வாரிசு ஹீரோக்கள் வாரிசு இயக்குனர்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in