Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியாவில் படமெடுக்க சொந்த விமானத்தில் வந்த இயக்குநர்!

28 செப், 2019 - 16:10 IST
எழுத்தின் அளவு:
christopher-nolan-came-india-with-his-own-flieght

இந்தியாவில் எந்த மொழியில் படம் எடுத்தாலும் சரி... ஒரு பாடல் காட்சியையாவது வெளிநாட்டிற்கு சென்று எடுத்து வர வேண்டும் என்பது, இந்திய இயக்குநர்களின் சிந்தனையாக இருக்கிறது. ஆனால், ஆங்கிலப் படங்களை எடுப்பவர்கள், பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு படபிடிப்புக்கு வருவது மிக மிக குறைவு. இத்தனைக்கும், இந்தியாவில் இல்லாத எந்த விஷயமும் வெளி நாடுகளில் இல்லை.

இந்தக் குறையைப் போக்கும் விதமாக பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், தான் எடுக்கும் டெனட் என்ற படத்தின் பெரும் பகுதியை இந்தியாவிலேயே படமாக்க திட்டமிட்டிருக்கிறார். அதற்காக தன்னுடைய சொந்த விமானமான கிரிஸ்டல் ஸ்கை என்ற போயிங் 777 விமானம் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்தவர், சென்னையில் வந்து சில நாட்கள் தங்கினார். பின், மும்பைக்குச் சென்று, அங்கு படபிடிப்பு நடத்துவதற்கான அடிப்படையான சில வேலைகளை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு தன்னுடைய விமானம் மூலம் சென்றார்.

அவருடைய விமானத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ளன. தெலைக்காட்சி நேரலை, வைபை, மேற்கத்திய உணவு தயாரிப்புக் கூடம், திரைப்படங்கள் பார்க்கும் வசதி, பாடல்கள் கேட்கும் வசதி என பல வசதிகள் விமானத்தில் இருக்கின்றன. விமானத்திலேயே விமானியும் விமானப் பணியாளர்களும் தங்கிக் கொள்ளும் வசதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விரைவில் இந்தியாவுக்கு படக் குழுவினருடன் வரும் கிறிஸ்டோபர் நோலன், படபிடிப்பை, இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடத்தி முடித்து விட்டு, அமெரிக்கா திரும்ப திட்டமிட்டிருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி ஜோடியாக த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா ?சிரஞ்சீவி ஜோடியாக த்ரிஷாவுக்கு ... சீனுராமசாமி படத்தில் இலங்கைத் தமிழ் பேசும் ஹீரோ சீனுராமசாமி படத்தில் இலங்கைத் தமிழ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
29 செப், 2019 - 10:35 Report Abuse
Rajagopal இவர் எடுத்த மெமென்டோ என்கிற படத்தை அப்பட்டமாகத் தமிழில் கஜினி என்ற பெயரில் காப்பி அடித்துக் கொள்ளை லாபம் சம்பாதித்தார் முருகதாஸ். அது போதாதென்று அதை இந்தியிலும் எடுத்துக் கொழுத்த லாபம் அடைந்தார். கிறிஸ்டோபர் நோலன் அந்தப் படத்தைப் பார்த்து மிகவும் வருத்தப் பட்டார். அவர் மெமன்டோவை எடுக்கும் பொது அவரிடம் அத்தனை பணமும் பெயரும் இல்லை. அதற்கு முருகதாஸ் எந்த விதத்திலும் சட்டப்படி உரிமைகள் வாங்கவில்லை. கிரிஸோட்பேர் நோலன் எடுத்த இன்செப் சான் என்கிற படத்தைக் காப்பி அடிக்க முடியாத அளவுக்கு செய்திருக்கிறார். இந்தியாவை வைத்து என்ன மாதிரி படம் எடுக்கிறாரோ. சில சமயங்களில் நம் ஊரில் இருக்கும் குப்பைகள் ஐரோப்பியர்கள் கண்ணில் பட்டால் அதை வைத்து நம் மானத்தை வாங்கி விடுவார்கள். கஜினி படத்திற்காக அவர் பழி இந்த மாதிரி வாங்கினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29 செப், 2019 - 04:40 Report Abuse
J.V. Iyer எல்லாம் மோடிஜியின் திருவிளையாடல்கள். மோடிஜியினால் இந்தியாவுக்கு பெருமை. இதை இந்த தமிழ்நாட்டு பாக்கிகள் அடிமைகள் கெடுக்காமல் இருக்கவேண்டும்.
Rate this:
Ray - Chennai,இந்தியா
29 செப், 2019 - 02:57 Report Abuse
Ray பிறகுதான் இந்தியாவை இப்படிக்கூட படமெடுக்க முடியுமான்னு நம்ம இயக்குனர் சிகரங்களுக்கே தெரியவரும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in