Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடவுள் நம்பிக்கை சர்ச்சை- வீடியோவில் சிவக்குமார் விளக்கம்

27 செப், 2019 - 19:12 IST
எழுத்தின் அளவு:
Sivakumar-clafiry-about-rumours-against-his-family-and-religion

சென்னை: தனது குடும்பத்தினர் பற்றி சமூகவலைதளங்களில் பரவிய தகவல்கள் தொடர்பாக, கடவுள் நம்பிக்கை பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் நடிகர் சிவக்குமார்.

நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன்களான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு என சமூகத்தில் நல்ல பெயர் உள்ளது. ஆனால் அவற்றைக் கெடுக்கும் வகையில் சமீபகாலமாக ஏதாவது ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்பி விவகாரத்தில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார் சிவக்குமார். அதனைத் தொடர்ந்து கல்விக் கொள்கை தொடர்பான சூர்யாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஜோதிகாவை மணந்து கொள்வதற்காக சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் சமீபத்தில் வைரலானது. மேலும் கார்த்தியின் சுல்தான் படம் தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தது. சிவக்குமார் குடும்பத்தினரின் மத நம்பிக்கை பற்றியும் பலர் சமூகவலைதளங்களில் விமர்சித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவக்குமார். அதில் அவர், “நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா? சிவன், முருகன், விநாயகன், சரஸ்வதி, லட்சுமி என்று சாமி தரிசனம் செய்பவர்கள் எத்தனையோ கோடி பேர் இருக்கிறார்கள். அல்லாவையும், இயேசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள்.

கடவுளுக்கு வடிவம் இல்லை. ஆண், பெண் என்ற பேதம் இல்லை! கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம்; விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல என்று சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால், அவரே உயிர் துறக்கும்போது ஹேராம் என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதாவது, அவர் ராமனை வணங்கியிருக்கிறார்.

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. எங்க வீட்டில் எல்லா சாமி படங்களுமே இருக்கும். என் அப்பா ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்குச் சென்று, திருப்புகழ் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார். நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன்.

உண்மையான பக்தி என்பது சாமி கும்பிடுவது மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் நேசித்தலும், அன்பு காட்டுவதும், சரிசமமாக பழகுவதும், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு உதவி செய்தல் ஆகியவைதான். இதைத்தான் அனைத்து மதங்களுமே சொல்கின்றன. இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான்; உயர்ந்த பக்திமான்! என இவ்வாறு அதில் சிவக்குமார் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
திரும்பவும் வனிதாவை வாத்து எனக் கூறிய கஸ்தூரிதிரும்பவும் வனிதாவை வாத்து எனக் ... உத்தம வில்லனுக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் தொடர்பு இல்லை: கமல் பதில் உத்தம வில்லனுக்கும் ஞானவேல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

sivakumar - Qin Huang Dao,சீனா
03 அக், 2019 - 00:21 Report Abuse
sivakumar தமிழ் நாட்டுக்கு கிடைத்த முத்து என நினைத்தேன் , கடைசியில் ஆண்டிபண்டாரம் போல் தோண்டியை போட்டு உடைத்து விட்டதுதான் மிச்சம்
Rate this:
Sabesh - Hindustan,இந்தியா
01 அக், 2019 - 22:39 Report Abuse
Sabesh சிவகுமார் ஆத்திரம் கொண்ட ஒரு மனநோயாளி... ஆன்மிகத்திற்கும் யோகாவிற்கும் களங்கம் விளைவிப்பதை தவிர இவர் வேறொன்றும் செய்வதில்லை..
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29 செப், 2019 - 05:05 Report Abuse
J.V. Iyer தவளையும் தன் வாயால் கெடும். சிவக்குமார் புதல்வர்கள் தங்கள் பேச்சினாலும், செயல்களினாலும் கெடுகின்றனர். தயவு செய்து இவர் தன்னுடைய புதல்வர்களுக்கு அறிவுரை கூறினால் நல்லது. அதை விட்டு.. சிம்பை விட்டு வாலைப்பிடித்தால்...
Rate this:
BALU - HOSUR,இந்தியா
28 செப், 2019 - 16:50 Report Abuse
BALU இந்துமதத்தை மட்டும் ஏளனம் செய்யும் பேடிப்பயல்.பணம் சம்பாதிக்க ஏதும் செய்யும் நன்றி கெட்ட நரி. இவர் முருகர் வேடத்தில் நடித்ததை நாம் சாட்சாத் முருகனென்று கையெடுத்துக் கும்பிட்டோம். நன்றிகெட்ட மதம்மாற்றி கூட்டம். சாதுக்களான இந்துக்களை வம்பிழுக்கும் சமூகத் தீவிரவாதி.
Rate this:
JSS - Nassau,பெர்முடா
28 செப், 2019 - 12:26 Report Abuse
JSS உள்ளுக்குள் விஷம் இருந்தாலும் விஷமம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொடுத்துவிடும் என்ற ஒரு சொல்பழக்கத்தில் இருக்கிறது. இவர் விஷயத்தில் விஷம் இருக்கிறதா விஷமம் இருக்கிறதா என்று கண்டு பிடிக்க முடியவில்லையே
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in