மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி | லிப்ட்-ல் பாடிய சிவகார்த்திகேயன் | ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி |
என்னை அறிந்தால், நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள, பார்வதி நாயருடன் பேசியதிலிருந்து...
சினிமா வாய்ப்பு நீங்கள் விரும்பி பெற்றதா அல்லது உங்களை தேடி வந்ததா?
சினிமா எனக்கு ரொம்ப பிடிக்கும். பிடித்ததால் தான், சினிமாவுக்கு வந்தேன். இன்ஜினியரிங் படித்த போது சினிமா வாய்ப்பு வந்தது. நான், வாய்ப்பை தேடி போகவில்லை. வாய்ப்பு, என்னை தேடி வந்தது.
திடீரென கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது ஏன்?
சின்ன வயதில் இருந்தே, எனக்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட். சோனி ஸ்போர்ட்ஸில், டி - -10 கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளன. இந்த போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின், அபுதாபியில் நடக்கிறது. அபுதாபி, நான் வளர்ந்த இடம். அபுதாபிக்கும், எனக்கும் அதிக தொடர்பு உள்ளது. டி- - 10 விளையாட்டு, யாருக்கும் போர் அடிக்காது. விறுவிறுப்பான விளையாட்டு என்பதால், நான் இதில் இணைந்தேன். 'கேரளா நைட்' அணிக்கு விளம்பர துாதராக இணைந்துள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டிலும், டி- - 10 போட்டிகள் வந்தால், கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
பிடித்த விளையாட்டு வீரர் யார்?
ஒருவரை மட்டும் சொல்வது ரொம்ப கஷ்டம். இந்த போட்டியை பொறுத்தவரை, இங்கிலாந்து அணியின் கேப்டன், மோர்கன் பிடிக்கும்.
எந்த மாதிரியான கதைகள் உங்களுக்கு பிடிக்கும்?
நான் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும், முந்தைய படங்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டும். என் பாத்திரம் முக்கியம். அதற்கு ஏற்றபடி, கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.
வரலாற்று பின்னணியில் தயாராகும் படங்கள், இப்போது அதிகம் வருகின்றனவே...
அந்த மாதிரி படங்கள் வந்தால் வரவேற்பேன். இதற்கு முன், இந்த மாதிரி படங்கள் அதிகம் வரவில்லை. தற்போது இதுபோன்ற கதைகள் நிறைய வருகின்றன. வரலாற்று படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக நடிப்பேன். அது நமக்கு ஒரு சவாலாகவும் அமையும்.
உங்கள் பார்வையில் சிறந்த நடிகை யார்?
இப்போது அந்த மாதிரி, எனக்கு யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால், திறமையான நடிகையர் அதிகம் உள்ளனர். பழைய நடிகையரை குறிப்பிட வேண்டுமானால், ஷோபனாவை பிடிக்கும். அவர் அளவுக்கு மற்ற யாரையும் பிடிக்கவில்லை.
உங்களுக்கு பிடித்த இயக்குனர், நடிகர்?
பிடித்த இயக்குனர் மணிரத்னம். நடிகர் என்றால், நிறைய பேரை சொல்ல வேண்டும். என் சின்ன வயதில், மோகன் லாலை ரொம்ப பிடிக்கும். அவரைப் போல், யாராலும் நடிக்க முடியாது.
சமூக வலைதளங்களில் உங்களைபற்றி சர்ச்சை கருத்து வந்தால், எப்படி உணர்வீர்கள்?
அதை ஒன்றுமே செய்ய முடியாது. அமைதியாக இருப்பதே, அதற்கான நல்ல தீர்வு. சில மணி நேரம் கழித்து, அமைதி தான் சிறந்தது என்பது நமக்கே புரியும்.
அடுத்து நீங்கள் நடிக்கும் படங்கள் என்ன?
விரைவில் தமிழில் புதிய பட அறிவிப்பு வெளியாகிறது; காத்திருங்கள்.