விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
ஜி.வி.பிரகாஷின் ‛100% காதல்' படத்தில் நடித்துள்ள நடிகை ரேகா பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், ‛உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனு, கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனு இருந்தால் வாழ்க்கை ஜம்முனு இருக்கும்' என விஜய் சொன்னது போன்று தான் என் வாழ்க்கையிலும் சென்று கொண்டிருந்தேன்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு யூ-டியூப் தளத்தில் நான் இறந்து போன்றும், என்னை புதைத்து அருகில் ரஜினி, கமல் எட்டி பார்ப்பது போன்றும் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டிருந்தார்கள். நான் உயிரோடு இருக்கும் போதே எனக்கு பாடை கட்டி, கற்பூரம் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள்.
சினிமா பிரபலங்களான கே.ஆர்.விஜயா, மோகன் போன்றவர்களை இப்படி சாகடித்து, அதை யு-டியூப் மூலம் பரபரப்பை உண்டு பண்ணி பணம் சம்பாதிக்கிறார்கள். இது நன்றாகவா இருக்கிறது. இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற யு-டியூப் தளங்களை அரசு தடை செய்ய வேண்டும் என்றார்.