Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் உடன் நடிக்கும் வடிவேலு? பரவும் பரபரப்பு ?

24 செப், 2019 - 18:32 IST
எழுத்தின் அளவு:
Did-Vadivelu-acting-in-Kamal-film

தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாகவே நம்பர் 1 நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அதன் பின் சினிமாவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார் வடிவேலு. அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்க யோசித்தார்கள்.

இருப்பினும், 'தெனாலிராமன், எலி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். 'கத்தி சண்டை, சிவலிங்கா' ஆகிய படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். இரண்டுமே எடுபடவில்லை. இருப்பினும் 2017ல் வெளிவந்த 'மெர்சல்' படத்தில் அவர் சிறிது நேரமே வந்தாலும் சிரிக்க வைத்தார்.

இதனிடையே, மீண்டும் வருவேன் என சில நாட்கள் முன் வடிவேலு அறிவித்தார். இப்போது அவர் கமல்ஹாசன் நடிக்க உள்ள 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கப் போவதாக செய்தி பரவி வருகிறது.

ஆனாலும், அப்படத்தைத் தயாரிக்கும் லைக்காவிற்கும், வடிவேலுவுக்கும் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்தில் மோதல் இருக்கிறது. அப்படியிருக்கையில் அவர் எப்படி அவர்கள் தயாரிக்கும் 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் நடிக்க சம்மதிப்பார்கள் என திரையுலகில் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒருவேளை, கமல்ஹாசன் வடிவேலு தான் வேண்டும் என்று சொல்லி வற்புறுத்தினால் மட்டுமே அது நடக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் சூர்யா - ஆர்யா கூட்டணிமீண்டும் சூர்யா - ஆர்யா கூட்டணி தாதா சாகேப் பால்கே விருது, ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து தாதா சாகேப் பால்கே விருது, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) கட்டுமர கம்பெனியில சேர்ந்து வாழ்க்கை தொலைத்துவிட்டாயே வைகைபுயல்
Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
25 செப், 2019 - 07:21 Report Abuse
PANDA PANDI லைக்காவிற்கும், வடிவேலுவுக்கும் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்தில் மோதல் இருக்கிறது அப்படியிருக்கையில் அவர் எப்படி அவர்கள் தயாரிக்கும் 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் நடிக்க சம்மதிப்பார்கள் என திரையுலகில் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். கேள்வியும் நானே பதிலும் நாமே. புரியவில்லை. யாரையோ மோதவிட்டு பாக்கிற முயற்சிப்போல இருக்கே.
Rate this:
25 செப், 2019 - 07:16 Report Abuse
Viji Viji விஜயகாந்த் என்ற நல்ல மனிதரை கெட்டவர்களுடன் சேர்ந்து எதிர்த்தது தான் இவர் வாழ்வில் செய்த தவறு.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 செப், 2019 - 03:49 Report Abuse
J.V. Iyer அப்படியென்றால் வடிவேலு தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு வைத்துக் கொள்ளும் ஆப்பு. இதற்க்கு "இனி நான் நடிக்கப்போவது இல்லை" என்று அறிக்கை விட்டு ஒதுங்கிக்கொள்வது எளிது. பாவம் வைகைப்புயல். அவர் எடுக்கும் முடிவு எல்லாம் இப்படி இருக்கிறது.
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் வடிவேலுவை அந்த ஏழுபேர் லிஸ்டில் சேர்த்து விட்டார்களோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in