Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிகில்' படத்திற்கான சிக்கல் ஆரம்பம்?

24 செப், 2019 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Bigil:-problem-begins?

சினிமா நடிகர்கள் அரசியல் பேச ஆரம்பிப்பதால் முதலில் அவர்கள் நடிக்கும் படங்கள் தான் சிக்கலைச் சந்திக்கின்றன. முன்பெல்லாம் சினிமாவில் எந்த விதமான அரசியல் வசனங்கள் இருந்தாலும் அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், சமீப சில வருடங்களாக அது பிரச்சினைக்குரிய விஷயமாக மாறுகிறது.

அந்த வகையில் விஜய் நடித்து வெளிவர உள்ள 'பிகில்' படத்திற்கான முதல் சிக்கல் இன்று(செப்.,24) ஆரம்பமாகியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய மறைமுக அரசியல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சு ஆளும் கட்சிக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. சில அமைச்சர்கள் விஜய்யை நேரடியாகவே கடுமையாக எதிர்த்துப் பேசினார்கள்.

இந்நிலையில் பிகில் இசை விழா நடைபெற்ற தாம்பரம் தனியார் கல்லூரிக்கு, எதன் அடிப்படையில் அனுமதி கொடுத்தார்கள் என்று விளக்கம் கேட்டு உயர்கல்வித் துறை செயலாளர் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த முதல் கட்ட சிக்கல் இத்துடன் நிற்குமா தொடருமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி - சேரன்மீண்டும் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி ... துணிச்சலான ரவீனா துணிச்சலான ரவீனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25 செப், 2019 - 07:44 Report Abuse
Natarajan Ramanathan தேவையே இல்லாமல் சிக்கல் விக்கல் என்று மெர்சல் போன்ற குப்பை படத்தை ஓடவைத்தீர்கள்... இப்போதும்கூட ஒரு கேவலமான மடையன் தனது தந்தையின் ஆப்பரேஷனுக்கு வைத்திருந்த 1.50 லட்சம் பணத்தை இந்த விக்கு மண்டையன் படத்துக்கு 80 அடியில் கட் அவுட் வைத்ததாகவும் ஆனால் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டில் போலீசார் தன்னை லத்தியால் அடித்து விரட்டியதாகவும் பேட்டி கொடுக்கிறான். அப்புறம் ரயில்வே தேர்வில் வட மாநிலத்தவர்கள் வெற்றி என்று ஊளையிடுகிறான் டுமீளன்.
Rate this:
24 செப், 2019 - 21:36 Report Abuse
ilaiyaraja muthu karumam.......karumam..... Ivan oru actor.... Ithu oru government...... oorrada ithu
Rate this:
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
24 செப், 2019 - 17:25 Report Abuse
Rajavelu E. இதிலிருந்து தெரியும் உண்மை என்னவென்றால் அரசின் பக்கம் தவறு இருக்கிறது அதனால்தான் இந்த பதற்றம்.
Rate this:
Mayavan Mayavan - Chennai,இந்தியா
24 செப், 2019 - 17:09 Report Abuse
Mayavan Mayavan பிகிலுக்கு திகில்
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
24 செப், 2019 - 17:06 Report Abuse
VSK சிக்கலா ? இலவச விளம்பரமா ?
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in