Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் ஆனார் அசோக் செல்வன்

24 செப், 2019 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Actor-Ashok-selvan-turn-as-producer

ஹீரோக்கள் தயாரிப்பாளர் ஆவது ஒன்றும் புதிதில்லை. அந்த வரிசையில் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் அசோக் செல்வன். அவரும் அபிநயா செல்வமும் இணைந்து ஹேப்பி ஹை பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் ஆக்சஸ் பிலிம் பேக்டரியுடன் இணைந்து தயாரிக்கும் படம்தான் ஓ மை கடவுளே.

ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்கிறார். ரித்விகா சிங் ஹீரோயின். படம் பற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான அபிநயா செல்வம் கூறியதாவது:

ஒரு கனவு நிறைவேறும் மகத்தான தருணமாக இதை நான் உணர்கிறேன். மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன் போன்ற வெற்றிப் படங்களுக்கு தூணாக துணை நின்ற, ஆக்ஸஸ் பிலிம்ஸ் டில்லிபாபு எங்களது கனவு நனவாக ஆதார சக்தியாக அமைந்திருப்பதை பெருமையுடனும் பெருமகிழ்வுடனும் பகிர்ந்து கொள்கிறோம். பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு, படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்திருக்கிறது.

காதல் எப்படி சாகாவரம் பெற்றதோ அதுபோல், காதல் கலந்த நகைச்சுவைப் படங்கள் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு பெறும் படங்களாகத்தான் இருக்கும். அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தன் முழுத் திறமையும் வெளிப்படும் வகையில் மிக அழகாக செதுக்கி தன் முதல் படத்தை உருவாக்கியிருக்கிறார். என்றார் அபிநயா செல்வம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கயல் சந்திரனுக்கு கைகொடுக்குமா தி.தி.கூட்டம்?கயல் சந்திரனுக்கு கைகொடுக்குமா ... மெதுவாக வெளியாகிறது மிக மிக அவசரம் மெதுவாக வெளியாகிறது மிக மிக அவசரம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in