Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகிலுக்காக தர்பார் பட வாய்ப்பை மறுத்த இந்துஜா

23 செப், 2019 - 19:24 IST
எழுத்தின் அளவு:
Indhuja-avoid-Darbar-due-to-Bigil

சென்னை: பிகில் படத்தால் தர்பார் பட வாய்ப்பை மறுத்து விட்டாராம் நடிகை இந்துஜா. நடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள படம் பிகில். அடுத்தமாதம் தீபாவளி ரிலீசாக இப்படம் ரிலீசாக இருக்கிறது. பெண்கள் கால்பந்தை கதைகளமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரத்தில் இந்துஜாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்காக இந்துஜா தனது தலைமுடியைக் குறைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான மகாமுனி படம் இந்துஜாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார் என்ற பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது. எனவே, பிகில் படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், ரஜினியின் தர்பார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுக்க வேண்டிய நிலை இந்துஜாவுக்கு ஏற்பட்டு விட்டதாம்.

தமிழில் நடிக்கும் அனைவருக்குமே ரஜினி படத்தில் ஒரு ஓரத்தில் நின்று போகும் காட்சியாவது கிடைக்காதா என்ற ஏக்கம் நிச்சயம் இருக்கும். அப்படி இருக்கையில் தர்பார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை இந்துஜா மறுத்து விட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஜெனிபர் லோபஸ் படத்துக்கு மலேசியாவில் தடை!ஜெனிபர் லோபஸ் படத்துக்கு ... தமன்னா புது முடிவு தமன்னா புது முடிவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
24 செப், 2019 - 01:14 Report Abuse
TAMILAN ரஜினி காலம் முடிந்து விட்டது. அவரே பட வாய்ப்புகள் குறைந்து விடுமோ என்ற பயத்தில் அரசியலில் வர ஆசைப்படுகிறார்.
Rate this:
JMK - Madurai,இந்தியா
24 செப், 2019 - 11:53Report Abuse
JMKசரியான காமெடி ? விஜய் / அஜித் காலமும் விரைவில் முடியும் ? ஹா ஹா ஹா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in