Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி நடிகர் சதீஷுக்கு விரைவில் திருமணம்

23 செப், 2019 - 19:17 IST
எழுத்தின் அளவு:
Did-comedy-actor-sathish-engaged

சென்னை: காமெடி நடிகர் சதீஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் அவர் தனது திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொய் சொல்ல போறோம் படத்தில் உதவி வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் சதீஷ். பின்னர் ஜெர்ரி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். மதராசப்பட்டிணம் படம் இவருக்கு மக்களிடையே நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

தற்போது தமிழின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக சதீஷ் வலம் வருகிறார். கண்ணை நம்பாதே, 100% காதல், 4ஜி, அருவம், சீறு, தீமை தான் வெல்லும், டெடி என கைநிறையப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சதீஷ் கழுத்தில் மாலையுடன் நிச்சயதார்த்த கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே இதற்கு முன்னர் படப்பிடிப்பு ஒன்றில் அவர் கழுத்தில் மாலையுடன் நிற்கும் காட்சி வைரலானதால், இந்தப் புகைப்படமும் உண்மையானதா இல்லை படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உண்டானது.

இது பற்றி சதீஷ் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்ற போதும், இந்த புகைப்படம் உண்மையானது தான் என்பது தெரிய வந்துள்ளது. இயக்குநர் ஒருவரின் தங்கைக்கும், சதீஷுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதாகவும், விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை சதீஷ் வெளியிடுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெயில் நடிகையின் துணிச்சல் நடிப்புவெயில் நடிகையின் துணிச்சல் நடிப்பு ஜெனிபர் லோபஸ் படத்துக்கு மலேசியாவில் தடை! ஜெனிபர் லோபஸ் படத்துக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in