Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினேகா பற்றி பிரசன்னா நெகிழ்ச்சி

23 செப், 2019 - 19:09 IST
எழுத்தின் அளவு:
Prasanna-praises-Sneha

சென்னை: சினேகாவை மணந்த பிறகு தனது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.

தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் சேர்ந்து நடித்த போது, இவரும், நடிகர் பிரசன்னாவும் காதலிக்கத் தொடங்கினர். கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு விஹான் என்ற மகன் உள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு சில காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்த சினேகா, பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டாவது குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

இந்நிலையில், தனது வாழ்க்கையை சினேகாவுக்கு முன், சினேகாவுக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம் எனக் கூறியுள்ளார் பிரசன்னா. சினேகாவை மணந்த பிறகு தனது வாழ்க்கையில் நல்ல நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே எனக்கு ஆசை இருந்தது. என்ஜினீயரிங் படித்த போதும் அந்த எண்ணம் மனதில் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த லட்சியம் நிறைவேறியது.

மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்டமிட்டேன். பிரதர்ஸ்டே படம் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது. இது மலையாளத்தில் எனக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். மலையாளத்தில் சரளமாக பேச கற்றுக்கொண்டேன்” என்கிறார் பிரசன்னா.

தற்போது மாபியா என்ற படத்தில் அருண் விஜய்யுடன் பிரசன்னா நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்பை மக்களிடையே அதிகப்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் பேச்சால், அவரது ரசிகர்கள் மாறுவார்களா?விஜய் பேச்சால், அவரது ரசிகர்கள் ... வெயில் நடிகையின் துணிச்சல் நடிப்பு வெயில் நடிகையின் துணிச்சல் நடிப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
24 செப், 2019 - 17:14 Report Abuse
Ramasami Venkatesan ஜோதிடர்கள் கூறுவார்கள், இந்த ஜாதகருக்கு மனைவியால் மேன்மை, அதிர்ஷ்டம் கூடி வரும் என்பார்கள். அது இது தானோ. பொருத்தமான ஜோடி அதிர்ஷ்டமும் சேருகிறது.
Rate this:
LAX - Trichy,இந்தியா
24 செப், 2019 - 07:25 Report Abuse
LAX ம்.. 5 Star ல நடிச்சதால.. (ஸ்நேகா உள்பட) எல்லாரும் உன்ன சாக்லேட் னு நினைச்சிருப்பாங்க.. அச்சமுண்டு.. அச்சமுண்டு foreign shoot கேக்கவே வேணாம்.. ரொம்பவே நம்பியிருப்பாங்க.. 'ஒரு தயிர் சாதத்துக்கு' ஸ்நேகா செட்டானா.. கேக்கணுமா..ம்.. நடத்து.. நடத்து..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in