அழியாத கோலங்களாய் தலைமுறைகள் கடந்து வாழும் பாலுமகேந்திரா | ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? |
சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடித்த ‛காப்பான்' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. கே.வி.ஆனந்த் இயக்கி இருந்தார், லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதமரின் பாதுகாப்பு படையின் வீரம், தியாகத்துடன் விவசாயமும் கலந்த படம்.
இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த கொண்டிருக்கின்றன. முதல் 3 நாட்கள் வசூலும் நன்றாக இருந்தது. ஆனால் காப்பான் படம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்ஜெட்டை நேர் செய்ய வேண்டுமானால் வசூல் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். இதற்கிடையில் காப்பான் படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்களே அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. இதை கண்டித்து இயக்குனர் விக்னேஷ்சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
இன்று ரசிகர்கள் ஒரு படத்தை ரசிப்பதை விட்டுவிட்டு அதைத் தோண்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் முயற்சிகளைப் பாராட்டாமல் சில விமர்சகர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தைக் காட்டவே நினைக்கின்றனர். ஒரு படம் பல தரப்பட்ட ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்.
இந்தக் காலத்தில் சாதாரணப் பொதுமக்கள் கூட விமர்சகர்களாகி விடுகிறார்கள். படங்களைத் தோண்டித் துருவாமல் அவற்றை ரசிக்கத் தொடங்குவோம். தோல்விகளை மன்னிப்போம். இவ்வுலகில் எதுவுமே சரியானது இல்லை. அப்படியிருக்க ஏன் ஒரு திரைப்படம் மட்டும் சரியில்லாததாக இருக்கக்கூடாது?
சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவும், பல திருப்பங்களுக்காகவும், நடிகர்களில் நல்ல நடிப்புக்காகவும் இன்னும் பல விஷயங்களுக்காகவும் நான் காப்பானை மிகவும் ரசித்துப் பார்த்தேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து விவகாரங்களையும் கொண்டிருக்கும் பிரதமருடைய அலுவலகத்தைப் பற்றிக் காட்ட வேண்டும் என்பதே கே.வி.ஆனந்தின் நோக்கம்.
ஒரு பிரதமருடைய பணி என்ன என்பதை ஒரு சதவீதமாவது காட்ட வேண்டும். பிரதமர் கதாபாத்திரத்தை மோகன்லால் அற்புதமாகச் செய்திருந்தார். சூர்யா ஒவ்வொரு பிரேமிலும் கச்சிதமாக இருக்கிறார். இதற்கு எப்படிப்பட்ட உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டிருக்கும்? வாழ்த்துகள் சார். ஆர்யாவும் மற்ற நடிகர்களும் கூலாக நடித்துள்ளனர். பார்க்கச் சீராகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது.
காப்பான் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நல்ல படம். உங்கள் குடும்பத்தோடு சென்று பாருங்கள். படத்தில் இருக்கும் தேசபக்தி தருணங்களை ரசியுங்கள். லைகா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் திருப்பங்களை ரசியுங்கள்.
இவ்வாறு இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.