Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழை இனி யார் காப்பான்..? சூர்யா ரசிகர்களால் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர்

22 செப், 2019 - 13:53 IST
எழுத்தின் அளவு:
inspector-about-spelling-mistake-apology-letter-of-surya-fans

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டம், புவனகிரியில், நேற்று திரைப்படத்திற்கு அங்கிருக்கும் கல்லூரி மாணவர்கள் சென்றனர். அப்போது, அவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்றனர். அவர்களை, புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர், புவனகிரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

முன் அனுமதி வாங்காமல், இதுபோன்று ஊர்வலம் செல்லக் கூடாது, திரையரங்கில், பேனர் வைக்க கூடாது என்றெல்லாம், கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். பின், இனிமேல் அப்படி செய்யமாட்டோம் எனவும் கடிதம் எழுதி வாங்கினார். கடிதம் எழுதிய ஆறு பேரும், தமிழை தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்துள்ளனர். அதில் ஒரு மாணவன் ஆய்வாளர் என்பதை ஆவ்யாளர்னு எழுதிருக்கிறார்.


"மனச திடப்படுத்திக்கிட்டுத்தான், அதை படிச்சேன். படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைச்சது..." என, தனது பேஸ்புக் பக்கத்தில், அம்பேத்கர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த கடிதம் எழுதிய 6 பேரும், கல்லூரி படிக்கின்ற மாணவர்கள். இப்படியே நிலைமை போனால், யார் காப்பான் இவர்களையும்; இவர்களின் தமிழையும் என்று வினவியுள்ளார் ஆய்வாளர் அம்பேத்கர்.


Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
நண்பர் படத்தில் விஷ்ணு விஷால்; ஜோடி - ப்ரியா பவானி சங்கர்நண்பர் படத்தில் விஷ்ணு விஷால்; ஜோடி - ... நாடோடிகள்-2வை எதிர்பார்க்கும் பரணி நாடோடிகள்-2வை எதிர்பார்க்கும் பரணி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Ram - ottawa,கனடா
25 செப், 2019 - 07:05 Report Abuse
Ram இவர்களால் ரவுடித்தனம் செய்து திரியதான் முடியும் , தமிழுக்கு ஒன்னும் செய்ய மாட்டார்கள் .
Rate this:
LAX - Trichy,இந்தியா
23 செப், 2019 - 12:52 Report Abuse
LAX மைக் கிடைச்சுட்டா- கம்பராமாயணக் காப்பாளரா தன்னை நினைச்சுக்கிட்டு மைக்க கடிச்சு துப்புறவரும்.. சினிமாவுல டயலாக் பேசறதா நினைச்சுக்கிட்டு 'கல்விக் கொள்கை'க்கு எதிரா பேசற அதிமேதாவியும்.. இவிங்களுக்கெல்லாம் தமிழ் ட்யூஷன் எடுக்கட்டுமே.. 😡
Rate this:
Shiv - Coimbatore,இந்தியா
23 செப், 2019 - 12:09 Report Abuse
Shiv அது மட்டுமா பேஸ்புக் போன்ற பதிவுகளில் தமிழ் தமிழ் என்று கூவும் பெரும்பாலான குஞ்சுகள், எழுதும் தமிழ் பதிவுகளை பாரதி படித்து இருந்தால், அச்சமுண்டு, அச்சமுண்டு, குஞ்சுகள் தமிழை பார்த்தாலே என்று பாடியிருப்பான்
Rate this:
prem - Madurai ,இந்தியா
23 செப், 2019 - 11:36 Report Abuse
prem இது தான் தமிழையும் தமிழ்மொழியையும் காப்பேன் என்றுபொய் சவால் விட்டு தனது கல்லாவை நிறைத்து கொண்டிருக்கிற போலி டுமிழர் களின் கைவண்ணம்.. வாழ்க தமிழ்... வளர்க்க தமிழர்களின் மொழி அறிவு.... தமிழை வளர்த்தல் இந்த நிலைதான்....பாவம்
Rate this:
A. Narayanan - Chennai,இந்தியா
23 செப், 2019 - 11:29 Report Abuse
A. Narayanan ஸ்டாலின், உதயநிதி, வைகோ, வீரமணி இன்னும் பலர் தமிழுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார். அவர்கள் கைவசம் டிவி சேனல்கள் இருக்கின்றன. தமிழ் நன்றாகத்தான் வளர்க்கப்பட்டிருக்கிறது இவர்களால்.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
23 செப், 2019 - 12:09Report Abuse
Chowkidar NandaIndiaநீங்கள் சொன்னவர்கள் தமிழுக்காக இல்லாவிட்டாலும் நாடு வளம்பெறுவதற்காவது தங்கள் உயிரை கொடுத்தால் நாடு நலம்பெறும். யோசிப்பார்களா இவர்கள்?...
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in