Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

22 செப், 2019 - 11:19 IST
எழுத்தின் அளவு:
court-ordered-to-file-case-against-sathya-jyothi-films-thyagarajan

மூன்றாம் பிறை, பகல் நிலவு, ஜீவா, இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன், உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். இதன் தயாரிப்பாளர் தியாகராஜன் அஜீத் நடிப்பில் விவேகம் படத்தை தயாரித்தார். அந்தப் படம் தோல்வி அடைந்ததில் பெரும் இழப்பை சந்தித்தார். இதை சரிக்கட்ட அஜீத் தனது அடுத்த படமான விவேகத்தை தயாரிக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார். படமும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் விவேகம் படத்தை மலேசியாவில் வெளியிட்ட வகையில் தன்னை மோசடி செய்து விட்டதாக சத்யஜோதி நிறுவனம் மீது மலேசிய டிஆர்எஸ் நிறுவனத்தின் இயக்குனர் கிளாட்டஸ் பிரெட்ரிக் ஹென்றி சென்னை எழும்பூர் குற்றவியில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் "நாங்கள் விவேகம் படத்தை மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட நாடுகளில் வெளியிடும் உரிமையை சத்தியஜோதி தியாகராஜனிடமிருந்து 4 கோடியே 25 லட்சம் கொடுத்து வாங்கினோம். ஆனால் எங்களுக்கு தெரியாமல் இன்னொரு நிறுவனத்திற்கும் விற்று எங்களை மோசடி செய்து விட்டார். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இன்று பி.பி.ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள்இன்று பி.பி.ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள் கோமாளி ரீமேக் உரிமையை வாங்கினார் போனி கபூர் கோமாளி ரீமேக் உரிமையை வாங்கினார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in