Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

24 மணி நேரத்தில் பாடும் வாய்ப்பு பெற்ற பார்வையற்ற இளைஞர்

22 செப், 2019 - 10:36 IST
எழுத்தின் அளவு:
blind-man-gets-singing-chance-from-imman-with-in-24-hours

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் சர்ச்சைப் பதிவுகள், சண்டைகளுக்கு இடையே சில நல்ல விஷயங்களும் நடைபெற்று வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நொச்சிப்பட்டி என்னும் கிராமத்தில் இருக்கும் பார்வையற்ற இளைஞரான திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே... பாடலைப் பாடிய வீடியோ ஒன்றை அஜித் மதன் என்பவர் அவருடைய முகப் புத்தகத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.


அந்த வீடியோ 24 மணி நேரத்திற்குள்ளாக 3 லட்சத்திற்கு அதிகமான பார்வைகளையும், 18 ஆயிரம் ஷேர்களையும் பெற்றுள்ளது. நேற்று இரவே அப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் இமான் அந்த இளைஞரின் வீடியோவைப் பதிவிட்டு இவர் தொடர்பு எண்ணைத் தெரிவியுங்கள் என்று கேட்டிருந்தார்.


இரண்டு மணி நேரத்தில் “அந்த இளைஞரிடம் பேசினேன். அவரை சீக்கிரமே ஒரு பாடலைப் பாட வைக்கிறேன். கடவுள் அவருடன் இருக்கட்டும், வளங்களைத் தரட்டும். திருமூர்த்திக்கு இனிமையான நாட்கள் காத்திருக்கின்றன“, என்று பதிவிட்டிருந்தார்.


இமான் இசையில் திருமூர்த்தி பாடும் பாடலை நாம் விரைவில் கேட்கலாம்.


https://www.facebook.com/ajithmadhan.manalichennai/videos/2353362131596056/


Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்கர் விருது போட்டி, இந்தியா சார்பாக 'கல்லி பாய்' தேர்வுஆஸ்கர் விருது போட்டி, இந்தியா ... ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து தெலுங்கு நடிகர் ? ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

prem TRUTH - Madurai ,இந்தியா
23 செப், 2019 - 10:41 Report Abuse
prem TRUTH மனம் மிகவும் குளிர்ந்து விட்டது.... சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சமத்துவம் கிடைத்து கிடைத்தற்கரிய மனித பிறவியை மாண்போடு வாழவேண்டும். அதற்க்கான வாய்ப்புகளை நல்கி உயிர்களை மேன்மைப்படுத்த ஈசனிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் .... எளியவர்கள் வாழ்வின் உச்சத்தை அடையும் பொது எனக்கு கிடைக்கும் அமைதி அளவில்லாதது...
Rate this:
Ram - ottawa,கனடா
23 செப், 2019 - 08:32 Report Abuse
Ram பாலிவுட் பார்த்து காப்பியா? சொந்தமா ஒன்னும் பண்ணாதீங்க ,
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் ஆரம்ப காலத்திலே TMS வாய்ப்புக்கு அலைந்த கதையை அவரே சொல்லக் கேட்டிருக்கிறோம் இப்போது "எல்லாம் எல்லார்க்கும்" என்றாகியுள்ளது
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 செப், 2019 - 02:44 Report Abuse
skv srinivasankrishnaveni BEST WISHES TO Mr THIRUMOORTHI . COME BEST SINGER IN THIS WORLD
Rate this:
muthu Rajendran - chennai,இந்தியா
22 செப், 2019 - 13:22 Report Abuse
muthu Rajendran இசை அமைப்பாளர் இமான் அவர்கள் எப்போதுமே புதிய திறமை உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவும் பண்பு உடையவர் ஏற்கனவே இது போன்று பலருக்கும் வாய்ப்பு தந்துள்ளார் இந்த இளைஞரும் வாய்ப்பை பெற்று நன்கு புகழ் பெறட்டும் . எல்லா புகழையும் இறைவனுக்கு அளித்து இமான் அவர்களுக்கு இறைவன் திருவருள் கிடைக்க வாழ்த்துவோம்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in