குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் படங்களைத் தேர்வு செய்து அனுப்புவார்கள். அதற்காகப் படங்களைத் தேர்வு செய்து பார்க்கும் நிகழ்வு கொல்கத்தாவில் தற்போது நடந்து வருகிறதாம்.
அதற்கான தேர்வுப் போட்டியில் 28 இந்தியப் படங்கள் கலந்து கொண்டுள்ளன. அதில் தமிழிலிருந்து 'ஒத்த செருப்பு சைஸ் 7, சூப்பர் டீலக்ஸ், வட சென்னை' ஆகிய படங்கள் உள்ளன. இவற்றோடு சில ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி ஆகிய மொழிப் படங்கள் என 28 படங்கள் உள்ளன.
சமந்தா அவர் நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படம் பற்றி டுவிட்டர் பதிவில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். “ஆஸ்கர் விருதுக்கான இந்திய நுழைவில் போட்டியிடும் 28 படங்களுடன் சூப்பர் டீலக்ஸ் படமும் உள்ளது. அந்தப் படம் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட படம், அங்கீகாரத்திற்குத் தகுதியான படம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.