இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
நாடோடிகள் 2 படம் ரிலீசான பின், திருநங்கைகள் மீது மிகப் பெரிய மரியாதை சமூகத்தில் ஏற்படும் என நடிகரும், இயக்குநருமான சசிகுமார் கூறியிருக்கிறார்.
பதினோரு ஆண்டுகளுக்குப் பின், நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார் நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி. சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், பரணி, நமோ நாராயணா, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
சசிகுமார் பேசியதாவது: சமுத்திரகனி, எப்போதும் சமூகத்தின் மீதான தன்னுடைய பார்வையை செலுத்திக் கொண்டே இருப்பார். இந்தப்படத்திலும் அதை செய்திருக்கிறார். திருநங்கைகளும் சமூகத்தின் ஒரு அங்கம் தான் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்த்தி இருக்கிறார். இந்தப்படத்தில் நமீதா என்ற கேரக்டர் வருகிறது. திருநங்கையாக இருக்கும் அந்த கேரக்டர், சமூகத்தில் திருநங்கைகள் சந்திக்கும் சங்கடங்களையும்; வலிகளையும் மேற்கோள் காட்டி, படம் எடுத்திருக்கிறார். இந்தப் படம் ரிலீஸ் ஆன பின், சமூகத்தில், திருநங்கைகளுக்கு இருக்கும் மதிப்பு நிச்சயம் கூடும்.
இவ்வாறு அவர் பேசினார்.