Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கட்-அவுட்கள் இல்லாத 'காப்பான்' தியேட்டர்கள்

21 செப், 2019 - 13:11 IST
எழுத்தின் அளவு:
No-cut,-banners-for-Suriyas-Kaappaan

சாலை நடுவில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆன இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். அவருடைய மரணம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில்தான் அரசியல் கட்சிகளுக்காகவும், சினிமா நடிகர்களுக்காகவும் அதிகமான பேனர்கள் வைக்கும் சம்பவங்கள் நடைபெறும். சுபஸ்ரீயின் மரணத்திற்குப் பிறகு பல அரசியல் கட்சிகள் இனி பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார்கள்.

நடிகர்களில் விஜய், சூர்யா, கமல்ஹாசன் ஆகியோர் வெளிப்படையாக அறிவித்தார்கள். நடிகர் சூர்யா 'காப்பான்' பத்திரிகையாளர் சந்திப்பில் பேனர்கள் வைக்க வேண்டாம் அதற்குப் பதிலாக நலத்திட்ட உதவிகள் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

சுபஸ்ரீ உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு வெளிவரும் முன்னிணி நடிகரின் படமாக நேற்று சூர்யா நடித்த 'காப்பான்' படம் வெளிவந்தது. அந்தப் படம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் எந்த ஒரு கட்-அவுட்டையும் பார்க்க முடியவில்லை. அனுமதிக்கப்பட்ட விதமாக ஒரே ஒரு பேனர் மட்டுமே தியேட்டரின் உட்புறங்களில் வைக்கப்பட்டுள்ளது.

படம் வெளியாகும் முதல் நாளில் பல கட்-அவுட்டுகள் வைப்பது, தோரணங்கள் கட்டுவது என எந்த ஒரு கொண்டாட்டமும் நிகழவில்லை. மக்களின் விருப்பத்திற்கிணங்க சூர்யாவின் ரசிகர்கள் பேனர்கள் இல்லாத பட வெளியீட்டை கடைபிடித்ததற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆயிரம் தியேட்டர்களில் ‛அசுரன்'ஆயிரம் தியேட்டர்களில் ‛அசுரன்' என்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய் என்னவேணாலும் பேசுங்க... கம்முனு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Venu Gopal - chennai,இந்தியா
21 செப், 2019 - 15:31 Report Abuse
Venu Gopal அருமையான கலாச்சாரம் வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in