Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னட ரீமேக்கில் சத்யராஜ், சிபிராஜ்

21 செப், 2019 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Sathyaraj---Sibiraj-in-Kannada-remake

சத்யராஜ், சிபிராஜ் மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தை ‛சத்யா' இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். நண்பர்களுடன் இணைந்து தனஞ்செயன் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தில் நந்திதா ஸ்வேதாவும் இணைந்திருக்கிறார். இந்தப் படம் கவாலுடாரி என்ற கன்னட படத்தின் ரீமேக் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்து கர்நாடகாவில் வெற்றி பெற்ற படம் இது. இதனை ஹேமந்த் ராவ் இயக்கி இருந்தார். அனந்த் நாக், ரிஷி, சுமன், அச்யூத் குமார், ரோஷ்னி பிரகாஷ் நடித்திருந்தார்கள். சரண்ராஜ் இசை அமைத்திருந்தார். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். பி.ஆர்.கே புரொடக்ஷன் சார்பில் அஸ்வினி புனித் ராஜ்குமார் தயாரித்திருந்தார்.

ஒரு டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர் புதிதாக கட்டுமான பணி நடக்கும் பகுதியில் இருந்து 4 மனித மண்டை ஓடுகளை கண்டெடுக்கிறார். ஆனால் அது கண்டுபிடிக்க முடியாமல் பைலை மூடிய ஒரு வழக்கு தொடர்புடையது. ஆனால் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் அந்த மண்டை ஓடுகளுக்கு பின்னால் இருக்கும் கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

அதற்காக அனுபவம் வாய்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியை சந்திக்கிறார். அவர் தன் குடும்பத்தை இழந்து ஓய்வில் இருக்கிறார். அவரும் இவருக்கு உதவ முன் வருகிறார். இருவரும் சேர்ந்து அந்த ரகசியத்தை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் கதை. படு சுவாரஸ்யமான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படம் இது. தமிழ் ரீமேக்கில் டிராபிக் சப் இன்ஸ்பெக்டராக சிபிராஜும், முன்னாள் போலீஸ் அதிகாரியாக சத்யராஜும் நடிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பூஜா ஹெக்டே ஆதங்கம்பூஜா ஹெக்டே ஆதங்கம் அமெரிக்க பட விழாவில் விருது பெற்ற ராட்சசன் அமெரிக்க பட விழாவில் விருது பெற்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in