Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரைவேக்காட்டு அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை உயிர் பறிபோகுமோ? கமல் கோபம்

21 செப், 2019 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Subasri-dead;-kamal-angry-with-politicians

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சுபஸ்ரீ என்ற பெண், பேனர் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி இறந்தார். கடந்த ஆண்டு கோவையில் ரகு என்பவர் இதே போன்று இறந்தார். இவைகளை கண்டித்து கமல்ஹாசன் நேற்று ஒரு வீடியோ அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உலகத்தில் மிக கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? வாழ வேண்டிய பிள்ளைகளின் மரணச் செய்தியை பெற்றவர்களிடம் சொல்வது தான். சுபஸ்ரீயின் மரணச் செய்தியும் அப்படிப்பட்டது தான். தன் மகளின் ரத்தம் சாலையில் சிந்திக் கிடப்பதைப் பார்க்கும்போது, பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரின் மனதிலும் திகிலும் மரண வலியும் கண்டிப்பாக வரும். பெண்களை பெற்றவன் என்கிற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.

இந்த மாதிரி பல ரகுக்களும், சுபஸ்ரீக்களும் அரசாங்கத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொஞ்சம் அறிவு வேண்டாமா, எங்கு பேனர் வைக்க வேண்டும், எங்கு வைக்கக் கூடாது என உங்களுக்கு தெரியாதா, இவர்களைப் போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ?

எதிர்த்துக் கேள்விக் கேட்டால் ஏறி மிதிக்கின்றனர். தவறை கேள்வி கேட்டால் நாக்கை அறுப்பேன் என மிரட்டுவதுதானே இவர்களுக்கு தெரிந்த அரசியல். இம்மாதிரியான ஆட்களின் மீது எனக்கு நூலிழை அளவு கூட மரியாதையும் பயமும் கிடையாது. ஒருவேளை உங்களுக்கு பயமிருந்தால் என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள். மக்கள் நீதி மய்யம் உங்கள் சார்பாக, தவறுகளை தட்டிக்கேட்டு தீர்வும் தேடித்தர முற்படும்.

எங்களை ஆள்பவர்களை நாங்கள் தான் தேர்வு செய்வோம். ஆனால், நாங்கள் காலம் முழுவதும் அடிமையாகத்தான் இருப்போம், என்று சொன்னால், அதைவிட மூடத்தனம் எதுவும் கிடையாது. உங்களை சாதாரண மக்கள், சாதாரண மக்கள் என்று சொல்லிச் சொல்லியே அடிமையாகவே என்றும் வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள் தான் அசாதாரணமான தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் திண்ணமாக நம்புகிறேன். வாருங்கள், தவறுகளை தட்டிக் கேட்போம். புதிய தலைமையை உருவாக்குவோம்.

இவ்வாறு வீடியோவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.



Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
டிசம்பரில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்?டிசம்பரில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ... பூஜா ஹெக்டே ஆதங்கம் பூஜா ஹெக்டே ஆதங்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

V.Rajeswaran - chennai,இந்தியா
26 செப், 2019 - 11:36 Report Abuse
V.Rajeswaran கமலஹாசனும் அந்த அரைவேக்காடு அரசியல் வாதி தான் நாத்திகம் என்ற பெயரில் இந்து மத எதிர்ப்பு, தமிழர் நலன் என்ற பெயரில் மோடி எதிர்ப்பு, பகுத்தறிவு என்ற பெயரில் குறிப்பிட்ட ஜாதியை இழிவு செய்தல், அறிவாளி என்ற பெயரில் தமிழர் இந அழிப்புக்கு துணை போன காங்கிரஸ்க்கு பல்லக்கு தூக்குவது , உங்கள் கட்சிக்கும் திமுக , நம் தமிழர் போன்ற கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை
Rate this:
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
21 செப், 2019 - 16:46 Report Abuse
Ravi கமல் just nailed it. நன்றி கமல்.
Rate this:
21 செப், 2019 - 15:37 Report Abuse
karavaraya adhukalavadhu arai vekadu nee innum vegave illaye
Rate this:
ranjani -  ( Posted via: Dinamalar Android App )
21 செப், 2019 - 13:21 Report Abuse
ranjani எனக்கு இந்த ஆட்சி சரியாக தான் இருக்கு, நீங்க எல்லாரும் தான் சரி இல்லாத மாதிரி இருக்கு, ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் எல்லா சரியா புரியும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in