Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிசம்பரில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்?

21 செப், 2019 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Vignesh-Shivan---Nayanthara-wedding-may-be-on-December

சென்னை: வரும் டிசம்பரில் தனது காதலர் விக்னேஷ் சிவனை, நயன்தாரா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா. இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த கதை தான். பொது இடங்களில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

எப்போது இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ளும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். சமீபத்தில் இரு வீட்டாரும் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போதே அவர்களது திருமண அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் தங்களது பட வேலைகளில் பிசியாகினர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை வெகு விமர்சியாகக் கொண்டாடினார் நயன். அந்த பிறந்தநாள் விழாவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்த்தார் விக்னேஷ் சிவன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டும் டிசம்பரில் திருமணம் நடக்கும் என சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அரசியலில் களத்தில் சிம்பு?அரசியலில் களத்தில் சிம்பு? அரைவேக்காட்டு அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை உயிர் பறிபோகுமோ? கமல் கோபம் அரைவேக்காட்டு அரசியல்வாதிகளால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muraleedharan.M - Chennai,இந்தியா
22 செப், 2019 - 04:55 Report Abuse
Muraleedharan.M இதுதான் முக்கியம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in