Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாக்கில் விற்கப்பட்ட 'பிகில்' இசை விழா டிக்கெட் ?

20 செப், 2019 - 17:32 IST
எழுத்தின் அளவு:
Bigil-Audio-launch-ticket-sold-in-Black

அட்லீ இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'பிகில்' படத்தின் இசை வெளியீடு, சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் அரங்கில் நடைபெற்றது.

அந்த அரங்கில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை அமர முடியுமாம். ஆனால், 20000 வரை டிக்கெட்டுகளைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். அந்த டிக்கெட்டுகளைப் பெற்ற பல ரசிகர்கள் காலையிலிருந்தே விழா நடக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார்கள்.

ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட சரியாகப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது பற்றிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி உள்ளன.

மேலும், நேற்றைய இசை விழா டிக்கெட்டுகள் 5 ஆயிரம் ரூபாய் வரை பிளாக்கில் விற்கப்பட்டுள்ளதாகம் விஜய் ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

விழாவில் கலந்து கொள்ள வந்து நெரிசல் காரணமாக கலந்து கொள்ள முடியாத பல விஜய் ரசிகர்கள் அவர்களது மொபைல் போன்களிலேயே களத்திலிருந்து எடுத்த வீடியோக்களை பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம் சம்பந்தப்பட்ட சில டெக்னீஷியன்கள் கூட நெரிசலில் சிக்கி சில கிலோ மீட்டர் வரை நடந்தே சென்றிருக்கிறார்கள். ஒரு சொதப்பலான விழாவாக 'பிகில்' இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் மீது விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
என் கதைக்கு விஜய் தான் : அட்லீஎன் கதைக்கு விஜய் தான் : அட்லீ 'நம்ம வீட்டுப் பிள்ளை' - செப்டம்பர் 27 வெளியாகும் என அறிவிப்பு 'நம்ம வீட்டுப் பிள்ளை' - செப்டம்பர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Muraleedharan.M - Chennai,இந்தியா
22 செப், 2019 - 04:58 Report Abuse
Muraleedharan.M இவன் ஓரு கிறுக்கன்
Rate this:
JMK - Madurai,இந்தியா
21 செப், 2019 - 13:10 Report Abuse
JMK இந்த சீப்பான விளமபரம் விஜய்க்கு தேவையா ? விழா அரங்கில் நிறைய இடம் காலியாக இருந்ததே ?
Rate this:
சமத்துவம் - Chennai,இந்தியா
21 செப், 2019 - 05:00 Report Abuse
சமத்துவம் தமிழகத்தில்.இத்தனை முட்டாள்களா? ச்சே என்று ஒழியும் இந்த சினிமா மோகம். அதைவிட அநியாயம் அம்புலன்சுக்கு வழியில்லாதது. வெளியே இதனை அக்கிரமங்கள் நடக்கும்போது உள்ளே ஞாயம் பேசியிருப்பதில் இருந்து தெரிகிறது அவர்கள் லட்சணம்.
Rate this:
Raj - coimbatore,இந்தியா
21 செப், 2019 - 03:17 Report Abuse
Raj இப்படித்தான் இருக்கும் இவர்கள் அரசியல் செய்ய வந்தால். ஒரு வேளை மத்த கட்சிக்காரங்க வேலைய காட்டிட்டாங்களா ?
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
20 செப், 2019 - 18:09 Report Abuse
shoba hahha.height of comedy....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in