32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி |
சென்னை தி.நகரில் வசித்து வருகிறார் பிரபல நடிகையான பானுப்ரியா. இவருடைய வீட்டிலேயே தங்கி, வீட்டு வேலை செய்வதற்காக, ஆந்திராவில் இருந்து சந்தியா என்ற பதினான்கு வயது பெண்ணை அழைத்து வந்தார். வீட்டில் வைத்து வேலை வாங்கினார்.
இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த பத்து பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணம் திருட்டுப் போனது. இதையடுத்து, நடிகை பானுப்ரியா, சென்னை தி.நகர், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனடியாக, ஆந்திராவில் இருந்து சிறுமி சந்தியா மற்றும் அவரது தாய் பிரபாவது ஆகியோரை, பாண்டிபஜார் போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர் அதில், பானுப்ரியா வீட்டில் சந்தியா திருடியதை ஒப்புக் கொண்டார். நகை மற்றும் பணத்தை, ஆந்திராவில் இருந்து தாய் பிரபாவதியிடம் கொடுத்ததாகச் சொன்னார். அதையே, பிரபாவதியும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, பிரபாவதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சந்தியா, சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இருந்தபோதும், பானுப்ரியா புகார் கொடுத்ததுமே, ஆந்திராவில் இருக்கும் சாலர்மகோட்டை காவல் நிலையத்தில், தன்னுடைய பெண் சந்தியாவை, பானுப்ரியா அடித்து கொடுமைப்படுத்தினார் என்றும், அதற்கு அவரது சகோதரரும் உடந்தை என்று, பிரபாவதி புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரை விசாரித்த ஆந்திர போலீசார், இரு முறை சென்னை வந்து பானுப்ரியா மற்றும் அவரது சகோதரரை விசாரித்தனர்.
பானுப்ரியா வீடு சென்னையில் இருக்கும் நிலையில், ஆந்திர போலீசார் புகாரை தொடர்ந்து விசாரிக்காமல், புகார் விவரங்களை, சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, புகாரை விசாரித்த பாண்டிபஜார் காவல் நிலைய போலீசார், பானுப்ரியா மற்றும் அவரது சகோதரர் மீது, இளம் பெண்ணை கொடுமைப்படுத்தியது, அடித்து காயப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், முன் ஜாமினுக்கு பானுப்ரியாவும், சகோதரரும் முயற்சிக்கின்றனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.