Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் பேனரை கிழியுங்க, ரசிகன் மீது கை வைக்காதீர்கள்: விஜய்

19 செப், 2019 - 22:48 IST
எழுத்தின் அளவு:
Dont-touch-my-fan,-Vijay

சென்னை: என் பேனரை கிழியுங்கள் ரசிகன் மீது கை வைக்காதீர்கள் என பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார்

விழாவில் அவர் பேசியதாவது: என் படத்தை உடையுங்கள் பேனரை கிழியுங்கள் ஆனால் என் ரசிகர்கள் மீது கைவைக்காதீர்கள். நாம கோல் போடுறதையும் தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். வாழ்க்கையும் ஒரு கால்பந்து மாதிரி தான். நாம கோல் போட கூடாது என ஒரு கூட்டம் தடுக்க வரும். உழைத்தவர்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி, ரசிகர்கள் தான்.


நம்ம கூட இருக்கிறவங்களே சேம்சைடு கோல் போடுவாங்க. யாருடையும் அடையாளத்தை எடுத்துக்காதீங்க. பெண்கள் ஜெயிக்கிற படத்தில் வாழ்க்கையில் ஜெயிச்ச நயன்தாரா நடித்திருப்பது சந்தோஷம் தான். எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க வேண்டும் என எம்.ஜி.ஆரை பற்றி குறித்து பேசிய விஜய், காரில் செல்லும் போது, கருணாநிதியை பற்றி தவறாக பேசியவரை இறக்கி விட்டார் எம்.ஜி.ஆர் என கூறினார். அரசியலில் புகுந்து விளையாடுங்க. ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க.


சுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய, விஜய் யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர். சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஹேஷ் டேக் போட்டால் நன்றாக இருக்கும். சமூக வலை தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும். இவ்வாறு விஜய் கூறினார்.



Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
விருது விழாவிற்கு செக்ஸியாக வந்த பேட்ட நாயகிவிருது விழாவிற்கு செக்ஸியாக வந்த ... சுற்றி வரும் சர்ச்சை சுற்றி வரும் சர்ச்சை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

madhavan rajan - trichy,இந்தியா
25 செப், 2019 - 12:52 Report Abuse
madhavan rajan இவர் மறைமுகமாக ரசிகர்களை தனக்கு பேனர் வைக்குமாறு தூண்டுகிறார். அவர்கள் பேனர் வைப்பது சரி என்பதுபோல பேசுவது நிச்சயம் தவறு. அவர்கள் வைப்பார்களாம். அரசு ஆட்களைவைத்து அதை கிழிக்கவேண்டுமாம். வைத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாதாம். அப்படி அக்கறை இருந்தால் சட்டப்படி உரிமம் பெற்று வையுங்கள் என்று கூறவேண்டியதுதானே. சட்டத்தை மதிக்க தெரியாத இவரெல்லாம் ஒரு ஹீரோ. சட்டத்தை மற்றவர்களுக்கு சொல்லித்தருவதுமாதிரி படத்தில் நடித்தால் மட்டும் போதாது.
Rate this:
krish - chennai,இந்தியா
20 செப், 2019 - 13:34 Report Abuse
krish உங்களை திரைப்படமாக்கும் தளத்தில் வைக்கவேண்டும் என்று சரியாக சொன்னீர்கள். நன்றி.
Rate this:
krishna - chennai,இந்தியா
20 செப், 2019 - 12:41 Report Abuse
krishna இவன் ஒருத்தன் இருக்கற தொல்லை தாங்காதுன்னு கேனயன் மாதிரி உளறிக்கிட்டே இருக்கான்.ஏற்கெனவே கமல் என்னும் கோமாளி அடிக்கும் கூத்தில் மக்கள் மண்டை காஞ்சு கெடக்கங்க. நடிக்கறத மட்டும் செஞ்சுட்டு பொத்திக்கிட்டு KEDA. ஜே இருந்தப்போ எப்படி இருந்தையோ அப்படி பவ்யமா இரு சீன் போடாத. உங்க அப்பNA முதல்ல காவி என கூவாம ஜபம் பண்ண சொல்லு.தில் இருந்த உன் உண்மையான பெயரோடு நாடி அதன் ஜோசப் VIJAY
Rate this:
RR Iyengar - Bangalore,இந்தியா
20 செப், 2019 - 12:41 Report Abuse
RR Iyengar நம்மாளுங்க சினிமாவுல மட்டும் தான் வசனம் பேசி நடிப்பாங்க ... ஆனா இந்த கிருஸ்தவர்கள் (உலகம் பூராவும்) நிஜத்திலும் வசனம் பேசி நடிக்கிறாங்கப்பா ... என்னா ஒரு தெறம
Rate this:
Girija - Chennai,இந்தியா
20 செப், 2019 - 12:38 Report Abuse
Girija வேல அத்தவன் பூனைக்கு ஷேவ் செய்தமாதிரி? இவனுக பேனர் வைப்பானுங்களாம், இன்னொருத்தன் அதை மெனக்கெட்டு வந்து கிழிக்கணுமாம்?
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in