‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
'காலா' படத்திற்கு பின் பா.ரஞ்சித், 'பிர்சா முண்டா' பற்றிய பயோபிக் படத்தை ஹிந்தியில் எடுக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் படம் ஆரம்பமாவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. எனவே, தமிழில் ஒரு புதிய படத்தை அவர் இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்யா, 'அட்டகத்தி' தினேஷ், கலையரசன் மற்றும் பலர் அந்தப் படத்தில் நடிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளாராம். வட சென்னை பின்னணியில் ஒரு பாக்சர் கதையாக அந்தப் படம் உருவாக உள்ளதாம். படத்திற்கு 'சல்பேட்டா' எனப் பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
இப்படத்தை 'குரங்கு பொம்மை' என்ற படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். சாராயம் என்பதன் சென்னைத் தமிழ் பெயர்தான் 'சல்பேட்டா'.