Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்?

17 செப், 2019 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Who-will-win-the-Biggboss-Title-winner

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை வெற்றி பெறப் போவது யார் என சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பிக்பாஸ் பற்றிய விவாதங்களும், பதிவுகளும் தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு உண்மையில் இவ்வளவு ஆதரவு இருக்கிறதா? இல்லை இது செயற்கையான ஏற்பாடா? என்ற குழப்பம் எல்லோர் மத்தியிலும் இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை பொறுத்த வரை, கடந்த இரண்டு சீசன்களை விடவும் இதில் உணர்ச்சிகரமான விளையாட்டுகள், அதாவது மைண்ட் கேம் தான் அதிகமாக விளையாடப்படுகிறது. உள்ளே சென்ற 17 போட்டியாளர்களும், கேரக்டர் அசாசினேசன்க்கு ஆளாகியுள்ளனர்.

மீரா, சரவணன், மது, அபிராமி, சாக்ஷி என வெளியே போன அனைவரின் இமேஜும் டோட்டலாக டேமேஜ் ஆகியுள்ளது. அதேபோல் உள்ள இருக்கும் கவின், லாஸ்லியா, ஷெரின், வனிதா, சேரன், முகென், தர்ஷன், சாண்டி ஆகியோரின் கேரக்டர்களும் ஒவ்வொரு விதமான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. இதனால் இந்த போட்டியில் யார் வெற்றிப் பெற போகிறார்கள் என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் எனும் கருத்து கணிப்பு, டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் போட்டியாளர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் செயல்படுகின்றனர். இந்த விஷயம் தொடர்ந்து கொண்டே இருப்பது சமூக ஆர்வலர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'சாஹோ' - தயாரிப்பாளர்களுக்கு லாபமா, நஷ்டமா ?'சாஹோ' - தயாரிப்பாளர்களுக்கு லாபமா, ... கடும் போட்டியில் காப்பான், ஆக்ஷன், நம்ம வீட்டுப் பிள்ளை கடும் போட்டியில் காப்பான், ஆக்ஷன், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Jayvee - chennai,இந்தியா
19 செப், 2019 - 12:36 Report Abuse
Jayvee கமலின் மனதை கவர்ந்த அந்த பெண் தான் டைட்டில் வின்னர்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in