Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சாஹோ' - தயாரிப்பாளர்களுக்கு லாபமா, நஷ்டமா ?

17 செப், 2019 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Saaho:-Profit-or-Loss

பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடிக்க, சுஜித் இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த படம் 'சாஹோ'. மூன்றாவது வாரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரையில் 425 கோடியைக் கடந்து வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஹிந்தியில் மட்டும் 150 கோடி வசூலித்துள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டதாகத் தகவல். ஆனால், ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளில் இப்படம் வெற்றி பெறவில்லை, அதிகம் வசூலிக்கவில்லை என அந்தந்த மொழித் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.

தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் இப்படம் தோல்வியடைந்து நஷ்டத்தைக் கொடுத்துள்ளதாம். ஆனால், ஒப்பந்தப்படி அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் எந்தவிதமான நஷ்ட ஈட்டையும் தர வேண்டியதில்லையாம்.

வெளிநாட்டு உரிமை 40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. அதே சமயம் 55 கோடி வரை வசூலித்துள்ளதாம். அமெரிக்காவில் மட்டுமே படம் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை என்கிறார்கள். அதனால், வெளிநாடு வியாபாரத்திலும் பெரிய அளவில் நஷ்டம் இல்லை என்று தகவல்.

தெலுங்கில் அட்வான்ஸ் முறையில் வெளியிடப்பட்டுள்ளதால் அந்தத் தொகையை தயாரிப்பாளர்கள் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அதே சமயம், டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, மற்ற உரிமைகள் என தயாரிப்பாளர்கள் 50 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் செய்துள்ளார்களாம்.

எனவே, தயாரிப்பாளர்களுக்கு படத்தைத் தயாரித்த வகையில் நஷ்டம் வர வாய்ப்பில்லை. அமெரிக்கா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களில் மொத்தமாகவும், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சில ஏரியாக்களிலும் படம் நஷ்டத்தைத் தந்துவிடுமாம். அது வினியோகஸ்தர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் மூலம் ஹிந்தியில் நேரடியாக அறிமுகமாகி ரூ.150 கோடி கிளப்பில் இணைந்த சாதனையை பிரபாஸ் பெற்றுவிட்டார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார்: புதிய வீடியோ வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்தர்பார்: புதிய வீடியோ வெளியிட்ட ... பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18 செப், 2019 - 06:11 Report Abuse
skv srinivasankrishnaveni paarkkum bekkukalukku parsu kaali adhu nichchayam
Rate this:
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
17 செப், 2019 - 11:41 Report Abuse
Raghuraman Narayanan Do not know whether producers incurred loss or not. For me I lost my money for viewed this film on the first day of its release.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in