Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் தலைப்புகளுக்கு கிண்டல் செய்தார்கள்: கே.வி.ஆனந்த் வருத்தம்

16 செப், 2019 - 13:14 IST
எழுத்தின் அளவு:
KV-Anand-feels-about-movie-title

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள முன்னணி இயக்குனர்களில் தொடர்ச்சியாக தங்களது படங்களுக்கு தமிழில் மட்டுமே தலைப்புகளை வைக்கும் இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், கவுதம் மேனன் ஆகியோர் மட்டுமே.

கவுதம் மேனன் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் தமிழ்ப் பற்றுடன் அழகான தலைப்புகளை வைத்து ரசிகர்களைக் கவர்பவர். “மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்”, இவையெல்லாம் கவுகௌதம் மேனன் வைத்த தலைப்புகள்.

கே.வி.ஆனந்த் தமிழில் தலைப்பு வைத்த படங்கள், “கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான்”.

இவர்கள் இருவர் அளவிற்கு வேறு இயக்குனர்கள் தொடர்ச்சியாக இப்படித் தலைப்புகளை வைப்பதில்லை என்று சொல்லலாம். ஆனாலும், தமிழில் தலைப்பு வைத்ததற்கு சிலர் கிண்டல் செய்தார்கள் என்கிறார் கே.வி. ஆனந்த்.

“இப்போதெல்லாம் வசனங்களை தமிழில் மட்டுமே எழுதிவிட முடியாது. மொழிக் கலப்பு நாம் பேசுவதிலும் வந்துவிட்டது. அதனால், படத்திற்கு வைக்கும் தலைப்பிலாவது தமிழ் இருக்கட்டுமே என்று வைக்கிறேன். தமிழிலேயே எவ்வளவோ தலைப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. 'கோ' என்று நான் தலைப்பு வைத்த போது பலரும் பசுமாட்டை வைத்து படம் எடுக்கிறீர்களா என்று கூட கிண்டல் செய்தார்கள்,” என்று வருத்தப்படுகிறார் இயக்குனர் கே.வி. ஆனந்த்.

ஜிஎஸ்டி வந்த பிறகு தமிழ் சினிமாவில் தற்போது 'தர்பார், பிகில், ஆக்ஷன், ஹீரோ, பேச்சிலர்' என ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட வேற்று மொழிகளில் தலைப்பு வைப்பது அதிகமாகி விட்டது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
எது நடந்தால் என்ன? விக்னேஷ் சிவன் செல்பிஎது நடந்தால் என்ன? விக்னேஷ் சிவன் ... பேனர் வேண்டாம், முதலில் சொன்னது யார்? - சண்டையிடும் ரசிகர்கள் பேனர் வேண்டாம், முதலில் சொன்னது யார்? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
18 செப், 2019 - 17:52 Report Abuse
Vasudevan Srinivasan தமிழ் வார்த்தை என்பது மட்டுமில்லாமல் கதைக்கு தகுந்த தலைப்புகளாக வைத்தால் நன்றாக இருக்கும்.. தமிழ் என்பதற்காக புரியாதமாதிரி தலைப்புகளை தவிர்க்கலாம் ...தெகிடி, சிகண்டி (வரவிருக்கும் படம்) ஏன் உங்கள் அயன் மற்றும் கவண் கூட சாமானியனுக்கு புரியாத தலைப்புதான்..
Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
17 செப், 2019 - 08:38 Report Abuse
Ganapathy தமிழ் தலைப்பிற்கு கிஸ்டிக்கும் என்ன தொடர்பு ?
Rate this:
16 செப், 2019 - 21:58 Report Abuse
நல்லவன் யோவ்....அறிவு கெட்ட முண்டம்...மணி ரத்னம் இவங்களுக்கு முன்னாலேந்து தூய தமிழ்ல தான்டா பேறு வெக்கறாறு
Rate this:
சிவசிபி - மணிகிராமம்,இந்தியா
17 செப், 2019 - 03:34Report Abuse
சிவசிபிநீயும் உன் தமிழும், முதலில் ஒழுங்காக தமிழில் பிழையில்லாமல் எழுதுங்கடா....
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
16 செப், 2019 - 18:20 Report Abuse
sankar அனேகன் அயன் எல்லாம் தமிழ் தலைப்பா . ?????
Rate this:
P.Niranjan - colombo,இலங்கை
16 செப், 2019 - 22:18Report Abuse
P.Niranjanபின்ன என்ன மொழி அய்யா ?...
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
17 செப், 2019 - 09:47Report Abuse
Matt Pஅனேகன் என்றால் பலர் என்று பொருள் . ...ஏகன் அனேகன் இறைவனடி போற்றி -திருவாசகம் . ...ஒருவன் பலராகினான் ...அந்தக்காலத்து இலக்கியங்களில் வடமொழி கலந்து தமிழாகவே ஆகிவிட்டது ....துருவ நட்சத்திரம் என்றால் தமிழா? அவர்களும் நக்ஷத்திரம் என்பதற்கு என்ன தான் தமிழில் கொள்வார்கள்? ...மின்மினி என்று சொல்லலாமா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in