Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எது நடந்தால் என்ன? விக்னேஷ் சிவன் செல்பி

16 செப், 2019 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Vignesh-Shivan---Nayanthara-Selfie

கொலையுதிர் காலம் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நாயகி நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதாரவி தனிப்பட்ட முறையில் விமர்சித்துப் பேசிவிட்டார் என்பதற்காக ஒரு பெண்ணை இப்படிப் பேசலாமா என கொதித்து எழுந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவரும் நயன்தாராவும் காதலர்கள் என சொல்லப்படுவதால்தான் அவர் அப்படி பேசுகிறார் என பலர் சொன்னார்கள். இருப்பினும் ராதாரவிக்கு எதிராகவும், விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்தார்கள்.

அப்போது மட்டும் பெண் என்ற விஷயத்தை முன்னிறுத்திய விக்னேஷ் சிவன் போன்றவர்கள் வேறு பெண்களுக்கு அநீதி நடந்தால் வாய் திறக்க மாட்டார்கள். கடந்த சில நாட்களாகவே பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி மரணமடைந்த சுபஸ்ரீ பற்றி சமூக வலைத்தளங்களில் பலர் பொங்கி எழுந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும், பல பிரபலங்கள் அது பற்றி வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் நாட்டில் எது நடந்தால் என்ன, சிலர் அவர்களது செல்பி வேலைகளில் கவனமுடன் இருக்கிறார்கள். நயன்தாரா நடிக்க விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படம் நேற்று முதல் ஆரம்பமானது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு செல்பியை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வழக்கம் போல அதிக லைக்குகளுடனும், அதிக கமெண்ட்டுகளுடனும் சமூக வலைத்தளங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது அந்த செல்பி.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தடுத்து இரண்டு பெரிய விழாக்கள்: வருவாரா நயன்தாரா ?அடுத்தடுத்து இரண்டு பெரிய ... தமிழ் தலைப்புகளுக்கு கிண்டல் செய்தார்கள்: கே.வி.ஆனந்த் வருத்தம் தமிழ் தலைப்புகளுக்கு கிண்டல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
18 செப், 2019 - 05:51 Report Abuse
Kalaiselvan Periasamy இவர்கள் யாவரும் ஏன் கருத்து கூற வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும் ? யாருக்கு கருத்து சொல்ல தோன்றுகிறதோ அவர்கள் சொல்லட்டும் . அதைவிடுத்து நாம் ஏன் சிலர் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும் . உணருங்கள் நெட்சங்களே .
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
17 செப், 2019 - 09:58 Report Abuse
narayanan iyer என்ன செய்ய? சுபஸ்ரீ ஒரு ப்ராமண பெண் .யாரும் சப்தம் உண்டாக்க மாட்டார்கள் .அதுவே ஒரு தலித் பெண்ணாக இருந்திருந்தால் நண்டு சிண்டு கட்சிகளில் தொடங்கி அனைவரும் குரல் கொடுத்திருப்பார்கள் .
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17 செப், 2019 - 05:29 Report Abuse
 nicolethomson விக்னேஷ் சிவநை கேள்வி கேட்டீங்க சார் , இந்த சித்தார்த் , துர்யா , விஜய் அம்மா , டுமீர் , பாரதி கூஜா , டீமான் , என்று பலரையும் ஊடகங்களில் பாலோ செய்து வருகிறேன் , ஒருத்தனும் வாய் திறக்கலையே ?
Rate this:
ajith -  ( Posted via: Dinamalar Android App )
16 செப், 2019 - 13:09 Report Abuse
ajith what dinamalar did for that girl expecting publish news about that can you tell me same all.cinema is a business they act you pay for watching it thats all.its purely business cant blame anyone on anything.stop these kind of news.all have privacy in life their will and wish
Rate this:
Karthi -  ( Posted via: Dinamalar Android App )
16 செப், 2019 - 13:06 Report Abuse
Karthi Why vignesh sivan has to comment on this incident,Dinamalar? who is he to comment.? Do you have the guts to write an article about the politician (whether he belongs to ruling or opposite party )who was behind the incident? if not then shut up, please.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in