Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் தலைப்புக்கு மோதல்

16 செப், 2019 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Who-will-get-Anitha-MBBS-Title

நீட் தேர்வு எழுதியும், மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டவர் அரியலூரைச் சேர்ந்த அனிதா. இவரின் வாழ்க்கையை வைத்து டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் என்ற தலைப்பில் படமாக எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மாங்காடு அம்மன் மூவீஸ் சார்பில் வி.ராஜகணபதி மற்றும் எஸ்.பாலாஜி தயாரிக்க அஜய்குமார் என்பவர் இயக்குவதாகவும், அனிதாவாக பிக்பாஸ் ஜூலி நடிப்பதாகவும் இருந்தது. தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடல் இருவரும் பிரிந்து விட்டனர்.

இப்போது இயக்குனர் எஸ்.அஜய்குமார், டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் படம் எடுக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அந்த தலைப்பு தங்களிடமே உள்ளது என்றும், முறைப்படி அனிதாவின் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் தயாரிப்பாளர் வி.ராஜகணபதி கூறுகிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: எஸ்.அஜய் குமாருக்கும், டாக்டர்.அனிதா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் எமது தயாரிப்பு நிறுவனமான மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் முறைப்படி பதிவு செய்துள்ளோம். அனிதாவின் கதையை நாங்கள் தான் படமாக எடுக்க இருக்கிறோம்.

இதற்காக அனிதாவின் தந்தை சண்முகம், சகோதரர் மணிரத்னம் ஆகியோரிடம் அனுமதி பெற்றோம். நானே இயக்கி அனிதாவின் தந்தையாக நடிக்கிறேன். அனிதாவின் அண்ணன் மணிரத்னமாக பெரம்பூரை சேர்ந்த ராஜன் என்பவர் அறிமுகமாகிறார். அனிதா கேரக்டரில் நடிக்க நடிகை தேர்வு நடந்து வருகிறது என்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பாடகர் ஆனார் ‛சரிகமப' ஸ்பெஷல் கார்த்திக்பாடகர் ஆனார் ‛சரிகமப' ஸ்பெஷல் ... 11 மொழிகளில் தயாரான ஸ்ரீகாந்த் திவாரியின் வாழ்க்கை 11 மொழிகளில் தயாரான ஸ்ரீகாந்த் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
18 செப், 2019 - 17:58 Report Abuse
Vasudevan Srinivasan வருத்தத்திற்குரிய ஒரு சோக சம்பவம் இதை எப்படி படமாக்க போகிறார்களோ..
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
16 செப், 2019 - 22:59 Report Abuse
Ram Sekar நம்ம செயலு சொடலை பேச்சு திறமை பற்றி ஒரு நகைச்சுவை படம் எடுக்கலாமே.
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
16 செப், 2019 - 22:58 Report Abuse
Ram Sekar அனிதாவின் சொந்த அண்ணனையே நடிக்க வைக்கலாம்
Rate this:
sathish -  ( Posted via: Dinamalar Android App )
16 செப், 2019 - 12:24 Report Abuse
sathish வியாபாரம்னா பிரச்சனை வரத்தான் செய்யும், ஏன்னா ஏல்லோருக்கும் பசிக்கும்ல....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in