Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேனர் விவகாரம் - ரஜினிகாந்த், அஜித் அறிவிப்பார்களா ?

15 செப், 2019 - 14:05 IST
எழுத்தின் அளவு:
did-rajini,-ajith-would-announce-against-banner

அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காக நடுரோட்டில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் அவர்களது விழாக்களில் பேனர்கள் வைக்கக் கூடாது என கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவிட்டனர்.

சினிமா பேனர்களை வைப்பதற்கு நடிகர்களும் அறிவிப்பு வெளியிடுவார்களா என்று அது குறித்தும் கேள்வி எழுந்தது. விஜய் நடிக்கும் பிகல் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் தாம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற உள்ளது. அந்த விழாவுக்காக எந்த பேனர்களையும் வைக்கக் கூடாது என ரசிகர்களுக்கு விஜய் தடை விதித்துளளார் என காஞ்சிபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் அறிவித்துள்ளார்.


நேற்று காப்பான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சூர்யா, பட வெளியீட்டின் போது பேனர்களை வைக்கக் கூடாது என அவரது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அதற்குப் பதிலாக நலத்திட்ட உதவிளைச் செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பேசிய கமல்ஹாசன், “இனி இது போல் நிகழாமல் இருக்க பாதுகாவலர்களாக நாமே இருக்க வேண்டும். 30 வருடங்களுக்கு முன்னால் என் ரசிகர் ஒருவர் பேனர் மீதிருந்து தவறி விழுந்து இறந்தார். அவர் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொன்னேன். அவர் அம்மாவிடம் நான் என்ன ஆறுதல் சொல்வது. வெளியில் வந்து இனி என் ரசிகர்கள் பேனருக்கு பால் ஊற்றுவது, மாலை போடுவது ஆகியவற்றை செய்யக் கூடாது என்று சொன்னேன். அசட்டுத்தனமாகக் கேட்கும் சில ரசிகர்களையும் தடுத்துதான் வைத்திருக்கிறேன்,” என்றார்.


இன்னும் ரஜினிகாந்த், அஜித் ஆகியோரிடமிருந்து இந்த பேனர் விவகாரம் குறித்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை. அவர்களும் சொல்லிவிட்டு அவர்களது பேச்சை சினிமா நடிகர்களின் ரசிகர்களும் சரியாக அதை பின்பற்றினால் பல குடும்பங்கள் காப்பாற்றப்படும்.


Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
ரவுடி பெயரில் நிறுவனம் ஆரம்பித்த விக்னேஷ் சிவன்ரவுடி பெயரில் நிறுவனம் ஆரம்பித்த ... சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் உதயநிதி சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

K.P SARATHI - chennai,இந்தியா
16 செப், 2019 - 13:27 Report Abuse
K.P SARATHI இவர்கள் சம்பாரிப்பதில் ஒவ்வொருபடத்திற்கு ஒரு கிராமத்தை தத்தெடுத்தாலே போதும் செய்வார்களா, யோசியங்கள் ரசிகர்களே
Rate this:
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
16 செப், 2019 - 11:42 Report Abuse
Dhanraj Jayachandren பேனர் வேண்டாம்னு சொன்ன கமலை பாராட்ட மனம் இல்லையா
Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
16 செப், 2019 - 11:19 Report Abuse
Varun Ramesh பேனர் வைக்கும் அரசியல் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் பேனர் வைத்து விளம்பரம் தேடும் திரைப்படத்தை இன்டர்நெட்டில் கூட பார்க்கமாட்டோம் என்றும் மக்கள் சபதமேற்க வேண்டும்.
Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
16 செப், 2019 - 09:37 Report Abuse
பஞ்ச்மணி இப்படி சினிமாக்காரன் சொல்ல கேட்டு திருந்திட்டார் அப்படினு ஒரு ஆளை பக்க முடியுமா என்ன காமெடி இது நம்ப மக்கள் ரொம்ப விவரம் காலம் மாறிப்போச்சு மக்களும் மாறிட்டாங்க பேனர் வெக்கறதுலே வேற உள்குத்து இருக்குமுன்னு நினைக்கறேன்
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
15 செப், 2019 - 21:10 Report Abuse
Ramesh M ரஜினி அவர்கள் யாருக்கு பாலபிஷேகம் செய்தார் சிவாஜிக்கு அல்லது MGR செய்தாரா ?
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in