Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரவுடி பெயரில் நிறுவனம் ஆரம்பித்த விக்னேஷ் சிவன்

15 செப், 2019 - 13:50 IST
எழுத்தின் அளவு:
vignesh-shivan-launched-new-production-company-named-as-rowdy

தமிழ் சினிமாவில் படத் தலைப்புகள்தான் தாறுமாறாக வந்து கொண்டிருக்கின்றன என்று பார்த்தால், தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையும் வித்தியாசம் என்ற பெயரில் விபரீதமாக வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அவர் ஆரம்பித்துள்ள புதிய சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ரவுடி பிக்சர்ஸ். விக்னேஷ் சிவன் இயக்கி வெளிவந்த நானும் ரவுடிதான் படம் வெற்றி பெற்றதால் அந்த ஞாபகார்த்தமாக இந்தப் பெயரை வைத்திருக்கலாம்.


இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான நெற்றிக்கண் படத்தின் முதல் அறிவிப்பை இன்று வெளியிட்டார்கள். எஸ்பி முத்துராமன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து 1981ல் வெளிவந்த படம் நெற்றிக்கண். அந்தப் பெயரை அனுமதி வாங்கி இப்போது வைத்துள்ளார்கள்.


இப்படத்தை சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். நெற்றிக்கண் படமும் ஒரு த்ரில்லர் படம்தானாம். நயன்தாரா முதன்மைக் கதாநாயகியாக நடிக்கும் படம் இது. இப்படத்தில் அவர் கண்பார்வையற்றவராக நடிக்கிறாராம்.


நயன்தாரா இதற்கு முன் நடித்து வெளிவந்த த்ரில்லர் கொலையுதிர் காலம் படத்தில் காது கேட்காத, வாய் பேசாதவராக நடித்தார். அதற்கு முன்பு அவர் நடித்து வெளிவந்த ஐரா படமும் த்ரில்லர் படம்தான். அடுத்தடுத்து இரண்டு த்ரில்லர் படங்கள் சரியாக போகாத நிலையில் மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாக்யராஜ் இழப்பீடு வழங்க வேண்டும்: பேரரசுபாக்யராஜ் இழப்பீடு வழங்க வேண்டும்: ... பேனர் விவகாரம் - ரஜினிகாந்த், அஜித் அறிவிப்பார்களா ? பேனர் விவகாரம் - ரஜினிகாந்த், அஜித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
15 செப், 2019 - 18:18 Report Abuse
அம்பி ஐயர் “உங்களைப் போடணும்... சார்...” இருட்டு அறையில் முரட்டு குத்து.... இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு... சிகை... இது போல இன்னமும் எண்ணற்ற ஆபாச பெயர்களில் படங்களே வந்திருக்கும் போது... இது என்ன பிரமாதம்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in