Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் வாழ்வில் வந்த சாத்தான்? - வடிவேலு

14 செப், 2019 - 16:22 IST
எழுத்தின் அளவு:
Sathan-in-my-life-says-Vadivelu

சென்னை: தான் மீண்டும் நடிக்க வரவுள்ளதாக காமெடி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா எவர்கிரீன் காமெடி நடிகர்களிள் வடிவேலு மிக முக்கியமானவர். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வடிவேலுவை தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆதர்ச நாயகன். அவருடைய ஒவ்வொரு ரியாக்ஷனும் வெவ்வேறு கேலி, கண்டல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒரு காலத்தில் வடிவேலு இல்லாத படங்களே இருக்காது. பெரிய நடிகர்கள் கூட வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிட்டு தான் தனது பட வேலைகளை ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்ட வடிவேலு சில வருடங்களாக பிரச்சினை மேல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். கடந்த 8 வருடத்தில் அவர் நடிப்பில் நான்கைந்து படங்கள் மட்டுமே வந்துள்ளன.

24ம் புலிகேசி, பேய் மாமா உள்பட சமீபத்தில் அவர் ஒப்பந்தமான எல்லாப் படங்களும் பிரச்சினையில் சிக்கியுள்ளன. இந்நிலையில் இம்மாதத்திற்குள் தான் ரீ-என்ட்ரி ஆக இருப்பதாக வடிவேலு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "இத்தனை நாட்களாக ஏன் நான் நடிக்கவில்லை என நீங்கள் கேட்கலாம். சீக்கிரம் செப்டம்பர் முடிவதற்குள் நான் நடிக்க வருவேன். ஒரு மிகப்பெரிய, அருமையான என்ட்ரியாக அது இருக்கும். எல்லோர் வாழ்விலும் சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும். அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா? அங்கங்க இருக்க தான் செய்தது. மக்கள் சக்திக்கு முன்னால் அது ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸில் இருந்து வெளியேறும் வனிதாபிக்பாஸில் இருந்து வெளியேறும் வனிதா அப்பாவுடன் இணைந்து சர்ப்ரைஸ்: யுவன் ஷங்கர் ராஜா அப்பாவுடன் இணைந்து சர்ப்ரைஸ்: யுவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

s.rajagopalan - chennai ,இந்தியா
20 செப், 2019 - 17:46 Report Abuse
s.rajagopalan சரியாக சொன்னார். ஏழரை சனி அவரை தி மு க விடம் சேர்த்தது ,. விஜயகாந்துடன் ஏற்பட்ட தகராறு மூலம். அன்றே சந்தானத்திற்கு சுக்ர தசை துவங்கிற்று சனி பகவானின் விளையாட்டை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் வடிவேலுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடம் மீண்டும் நிறைவு பெறப்போவது பற்றி பெரும் மகிழ்ச்சி.
Rate this:
LAX - Trichy,இந்தியா
18 செப், 2019 - 00:31 Report Abuse
LAX வந்து முன்ன மாதிரி காமடி வேடம் மட்டும் பண்ணுங்க.. ஹீரோ வேஷமெல்லாம் தனியா வேணாம்.. ஏனா.... காமடி ல நீங்க தானே ஹீரோ.. 2nd Innings வந்து.. இப்ப இங்க காமடிங்கற பேர்ல ஆபாசம் & நாராசம் பண்றவங்களையெல்லாம் மூட்டை கட்டி வெளியேறச் செய்யுங்க.. வாழ்த்துக்கள்..
Rate this:
LAX - Trichy,இந்தியா
18 செப், 2019 - 00:26 Report Abuse
LAX Wel(l) Come Back Ji..
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
17 செப், 2019 - 16:10 Report Abuse
இந்தியன் kumar ஆணவம் யாருக்கு வந்தாலும் அவர்கள் அழிவைதான் தேடி பெறுவார்கள்.
Rate this:
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
17 செப், 2019 - 10:42 Report Abuse
சிவ.இளங்கோவன் . சைத்தான் என்று சொன்னது தயாரிப்பாளர் சங்கரும் , 24 ஆம் புலிகேசி இயக்குநரைத்தான்
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in