ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
2016ல் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் சசி இயக்கிய 'பிச்சைக்காரன்'. அப்படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி அங்கும் 50 கோடிக்கு வசூலித்து சாதனை புரிந்தது.
மூன்று வருடங்களுக்குப் பிறகு சசி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. சித்தார்த், ஜிவி பிரகாஷ்குமார், லிஜாமோள் ஜோஸ், காஷ்மிரா என இளம் நட்சத்திரங்கள் நடித்த படத்திற்கு நல்ல விமர்சனம் வந்தது.
ஆனால், படத்தின் வசூல் மிகச் சுமாராகத்தான் இருக்கிறது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் வரவில்லை என்றதும் முந்தைய நாள் இரவு திடீரென அறிவித்து, மறுநாளே படத்தை வெளியிட்டது தான் அதற்கு காரணம் என்கிறார்கள்.
படத்திற்கான எந்தவிதமான பத்திரிகையாளர் சந்திப்பும், பிரமோஷன் பேட்டிகளும் நடக்கவேயில்லை. படத்தை சரியான விதத்தில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை. அதையெல்லாம் செய்திருந்தால் இந்தப் படம் 'பிச்சைக்காரன்' பட வசூலை நெருங்கும் அளவிற்கு வசூலைக் கொடுத்திருக்கும் என்று சொல்கிறார்கள்.
இந்த வாரம் பெரிய படங்கள் எதுவுமே வரவில்லை. கடந்த ஒரு வாரமாக 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்திற்கு பிரமோஷன் செய்துவிட்டு இந்த வாரத்தில் வெளியிட்டிருக்கலாம் என்பதே கோலிவுட்டில் பலரது கருத்தாக உள்ளது.
திடீரென படத்தை வெளியிடும் ஐடியாவைக் கொடுத்து இந்தப் படத்தின் வசூலைக் கெடுத்தது யாரோ?