விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
தமிழ் சினிமாவில் முந்தைய வருடங்களை விட இந்த வருடம் பல படங்கள் கடைசி நேர ரிலீஸ் சிக்கலில் சிக்க வெளியீடு தள்ளிப் போகும் நிலை உருவாகி வருகிறது.
இந்த வருடத்தில் விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெய், விமல் ஆகியோர் நடித்த படங்கள் கூட அப்படியான சிக்கலில் மாட்டியதுதான் ஆச்சரியம். ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு, தியேட்டர்கள் நடந்த முன்பதிவு என அப்படி வராத படங்களால் தொடர் பிரச்சினைகளால் திண்டாடும் நிலை ஏற்படுகிறது.
அனைத்து பிரச்சினைகளையும் முடித்து படம் கண்டிப்பாக வெளியாகும் என்ற சூழல் வருவதற்கு முன்னரே ஏதோ ஒரு சில காரணங்களால் பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்கிறார்கள். ஆனால், அதில் மிஞ்சி நிற்கும் சில பிரச்சினைகளால் அந்தப் படங்கள் திட்டமிட்டபடி வெளியாக முடியாமல் போகின்றன.
நேற்றும் விமல், வரலட்சுமி நடித்த 'கன்னிராசி' படம் வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, தியேட்டர் முன்பதிவும் நடந்து கடைசி நேரத்தில் காட்சிகளை ரத்து செய்திருக்கிறார்கள். பின்னர்தான் படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கிறார்கள்.
அப்படி தள்ளிப் போகும் படங்களின் ரிசல்ட்டும், சென்டிமென்ட்டாக, காலம் காலமாக சொல்லிக் கொள்ளும்படி இருப்பதில்லை. இந்த ஒரு சிக்கலை சம்பந்தப்பட்டவர்கள் எப்போது சரி செய்யப் போகிறார்கள்.