‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
இந்தியத் திரையுலகின் பெரும் இயக்குனர் என்று பேசப்படும் ஷங்கர், பெரும் நட்சத்திரம் என்று கொண்டாடப்படும் ரஜினிகாந்த், ஹிந்தித் திரையுலகின் வசூல் நட்சத்திரம் அக்ஷய்குமார் ஆகியோரது கூட்டணியில் உருவான '2.0' படம் கடந்த வருடம் வெளிவந்து ஹிந்தியில் மட்டுமே லாபத்தைக் கொடுத்தது. மற்ற மொழிகளில் நகரப்பகுதிகளில் பெரும் லாபம் தந்தது.
அப்படத்தை சீனாவில் வெளியிட்டு அங்கு வசூல் சாதனை புரிய வைத்து விடுவார்கள் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் நம்பினார். இரண்டு முறை வெளியிட திட்டமிடப்பட்டு படத்தைத் தள்ளி வைத்து கடைசியாக கடந்த வாரம் வெளியிட்டார்கள். 48000 ஸ்கிரீன்களில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக முதலில் அறிவித்தார்கள். ஆனால், 11000 ஸ்கிரீன்களில் தான் படம் வெளியானதாகத் தகவல்.
படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காமல் மற்ற இந்தியப் படங்களுடன் ஒப்பிடுகையில் வசூல் படுமோசமாகவே இருந்தது. சீனா ரசிகர்களுக்கு படம் பிடிக்காமல் போய்விட்டது. ஒரு வார வசூலாக சுமார் 21 கோடி வரை மட்டுமே 2.0 இதுவரை வசூலித்துள்ளது.
நேற்று சீனாவில் பல புதிய படங்கள் வெளிவந்ததால் 2.0 வின் மொத்த வசூல் அந்த 21 கோடியுடன் நிற்கும் நிலை உருவாகியது. சீனாவில் 500 கோடியாவது வசூலித்துவிடலாம் என்று தகவல் பரவியது. ஆனால், அதில் 4 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது.