'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
ராதாமோகன் இயக்கும் புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து, நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை ராதா மோகன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னையில் வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிடுகின்றனர்.
தற்போது எஸ்.ஜே.சூர்யா உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இரவாக்காலம் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன.