17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் | மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு' | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி | தியேட்டரில் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத செயல் : கமல், வெற்றிமாறன் கண்டனம் | 5 மொழிகளில் மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம் | விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயம் : மனைவி போலீஸில் புகார் |
ராதாமோகன் இயக்கும் புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து, நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை ராதா மோகன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னையில் வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிடுகின்றனர்.
தற்போது எஸ்.ஜே.சூர்யா உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இரவாக்காலம் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன.