கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
சென்னை: பெற்றோரின் கோபத்தால் கவினுடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் சமீபகாலமாக கவின், லாஸ்லியா காதல் கதை தான் ஓடிக் கொண்டிருந்தது. காதல் பிரச்சினையில் கவின் ஏற்கனவே பல சர்ச்சைகளில் உள்ளார். இந்த விவகாரத்தால் லாஸ்லியா பேரும் பிரச்சினையில் சிக்கியது.
ஆரம்பத்தில் இருந்தே சேரன் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால், அதனை லாஸ்லியாவும் சரி, கவினும் சரி பொருட்படுத்தவேயில்லை. லாஸ்லியாவின் நிஜ அப்பா வந்து சொன்னால் பார்த்துக் கொள்கிறேன் என கவின் கூறி வந்தார்.
இந்நிலையில் நிஜமாகவே பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் அப்பாவும், அம்மாவும் இந்த காதல் விவகாரத்தை மிகவும் கண்டித்தனர். இதனால் மனமாற்றம் அடைந்த லாஸ்லியா, 'இனி காதலைத் தொடர வேண்டாம்' என முடிவெடுத்து விட்டார். இதற்கு கவினும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கவின் தான் கொடுத்த வாக்கை எந்தளவிற்கு காப்பாற்றுவார் எனத் தெரியவில்லை.