Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிரிப்பில் இணைந்த சுனைனா

13 செப், 2019 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Sunaina-joints-in-Trip

தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து விட்டு ‛காதலில் விழுந்தேன்' படம் மூலம் தமிழுக்கு வந்தவர் சுனைனா. அதன் பிறகு மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, தொண்டன் உள்பட பல படங்களில் நடித்தார். விஜய் ஆண்டணி நடித்த காளி படம் சுனைனா நடித்த கடைசி படம். அதன் பிறகு சினிமா வாய்ப்பு இல்லாமல் வெப் சீரிசில் நடிக்கச் சென்றார். இப்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார்.

சாய் பிலிம்ஸ் ஸ்டூடியோ சார்பில் ஏ.விஸ்வநாதன் தயாரிக்கும் படம் டிரிப். இதில் அறிமுக நடிகர் பிரவீனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சுனைனா. இவர்கள் தவிர யோகி பாபு, கருணாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இது ஒரு சயின்ஸ் பிக்சன் படம். சாம் ஆண்டன் உதவியாளர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார். சித்துகுமார் இசை அமைக்கிறார், உதயசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தில் நடிப்பது பற்றி சுனைனா கூறியதாவது: இப்படத்தில் முதலில் என்னைக் கவர்ந்தது படத்தின் திரைக்கதை, அதை இயக்குநர் டென்னிஸ் சொல்லிய விதம் படத்திற்குள் பயணம் செய்தது போலவே இருந்தது.

சினிமாவில் அனுபவம் வாய்ந்த நடிகர், புதுமுகம் என்பதெல்லாம் முக்கியமில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதும், அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் தான் முக்கியம். படத்திற்காக நடந்த ரிகர்சலில் பிரவீன், தன் தனித்தன்மை வாய்ந்த சிறந்த நடிப்பை தந்தார். அவர் இப்படத்திற்கு மிகச் சிறந்த தேர்வாக தன்னை நிரூபிப்பார் என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 16ல் தலக்கோணம் காட்டுப்பகுதியில் துவங்குகிறது. அங்கு தொடர்ச்சியாக 38 நாட்களும், கொடைக்கானலில் 2 நாட்கள் நடக்கிறது. ஒரு பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்லும் படம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜி.வி.பிரகாஷ் ஜோடி வர்ஷா பொல்லம்மாஜி.வி.பிரகாஷ் ஜோடி வர்ஷா பொல்லம்மா ஸ்ரீகாந்த், ராய்லட்சுமியின் ‛மிருகா' ஸ்ரீகாந்த், ராய்லட்சுமியின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in