Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் சொல்வது உண்மை: வுண்டர்பார் வினோத்

13 செப், 2019 - 08:40 IST
எழுத்தின் அளவு:
Dhanush-says-the-truth

நடிகர் தனுஷ், அசுரன் பட விழாவில் பேசும்போது, சினிமா தயாரிப்பாளர்களில் சில ஒழுங்காக சம்பளம் தருவது கிடையாது என வெளிப்படையாக கூறினார். இந்தச் செய்தி, சினிமா தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் வேகமாக பரவியது. உடனே, நடிகர் தனுஷை, சினிமா தயாரிப்பாளர்கள் சிலர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் யாரும் நிம்மதியாக இருக்கின்றனரா? அவரை வைத்து படம் எடுத்தவர்கள் அனைவரும் ரோட்டுக்குத்தான் வந்திருக்கின்றனர். அவர் மட்டும் காரில் செல்வார். ஆனால், அவரை வைத்து படம் எடுத்தவர்கள், இருக்கும் வீட்டையும் விற்று விட்டு, நடு ரோட்டில் நிற்பது நடிகர் தனுஷுக்கேத் தெரியும். இருந்தும், அவர் அப்படியெல்லாம் பேசுவது சரியல்ல என்று கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

இந்நிலையில், இது பற்றி பேசியுள்ள வுண்டர்பார் பிலிம்ஸ் நிர்வாக இயக்குனர் வினோத், ‛‛தயாரிப்பாளர்கள் சொல்வது போல, நடிகர் தனுஷ் சொகுசு வாழ்க்கையெல்லாம் வாழவில்லை. அவர் கார் வாங்கி இருக்கிறார்; அதில் செல்கிறார். ஆனால், அந்த காரும் கூட லோன் போட்டு வாங்கியது தான். அதற்கு அவர், இன்னமும் மாதத் தவணை கட்டுவது எனக்கு நன்கு தெரியும்.

அதுமட்டுமல்ல, கொடி, எனை நோக்கி பாயும் படங்களில் நடித்ததற்காக தனது சம்பளத்தை பெரிதும் விட்டுக் கொடுத்துள்ளார். இன்னும் பலர் பாக்கி வைத்துள்ளனர். இதெல்லாம், நடிகர் தனுஷை வைத்து நஷ்டப்பட்டோம் என சொல்கிறவர்கள் கொடுப்பார்களா என அவர் கேட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் 400 தியேட்டர்களில் பிகில்தெலுங்கில் 400 தியேட்டர்களில் பிகில் அடுத்தடுத்து ஆரவ்விற்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து ஆரவ்விற்கு பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Jayvee - chennai,இந்தியா
14 செப், 2019 - 14:20 Report Abuse
Jayvee சினிமா உலகின் முதல் 420 தயாரிப்பாளர்கள் தான்.. தொழிலாளர்களுக்கு குறைந்த அல்லது சம்பளமே தராமல் ஏமாற்றுவது,பைனான்சியர்களுக்கு செக் பவுன்ஸ் செய்வது, வாய்ப்பு கேட்டு வரும் பெண்களிடம் தவறாக நடப்பது.. இவர்களுக்கு அடுத்து வருவது டிஸ்ட்ரிபியூட்டர்களும் அண்ட் ஹீரோக்களும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in