Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வங்கி கொள்ளை முயற்சி: பிரியங்காவிற்கு போலீஸ் எச்சரிக்கை

13 செப், 2019 - 07:48 IST
எழுத்தின் அளவு:
Police-warns-Priyanka-Chopra

மும்பை: ஸ்கை இஸ் பிங்க் படத்தில் வங்கியை கொள்ளையடிக்க திட்டம் போட்டது தொடர்பாக மகாராஷ்டிர போலீசார், நடிகை பிரியங்கா சோப்ராவை எச்சரித்துள்ளனர்.

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து இங்கு பட வாய்ப்புகள் அமையாததால், பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது அங்கு முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் காதலரை கரம் பிடித்த பிரியங்கா, மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஸ்கை இஸ் பிங்க் என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பர்ஹான் அக்தர் நடித்துள்ளார்.

அரிய நோயால் பாதிக்கப்பட்ட மகளின் மருத்துவ செலவிற்காக பெற்றோர் நடத்தும் போராட்டம் தான் படத்தின் கதை. இப்படத்தின் டிரைலருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் ஒரு காட்சியில், பர்ஹான் அக்தரிடம் தங்களின் பணத் தேவைக்காக வங்கியை கொள்ளையடிப்பது குறித்து பிரியங்கா பேசுகிறார்.

இந்நிலையில், இந்தக் காட்சியைப் பார்த்த மகாராஸ்ட்ரா போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில், "வங்கியை கொள்ளையடித்தால் இந்திய தண்டனை சட்டம் 393ன் படி, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்" என வேடிக்கையாக எச்சரித்துள்ளனர்.

இந்த டுவீட்டிற்கு பதிலளித்துள்ள பிரியங்கா, "அய்யய்யோ போலீசிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டோம். இனி பிளான் பியை செயல்படுத்த வேண்டியது தான்” என மற்றொரு டுவீட் வெளியிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக படத்தின் நாயகனான பர்ஹான் வெளியிட்டுள்ள டுவீட்டில், “இனிமேல் கேமரா முன்பு இப்படியெல்லாம் திட்டம் போடக்கூடாதுப்பா” எனத் தெரிவித்துள்ளார். இந்த வேடிக்கையான டுவீட்களை ரசிகர்கள் லைக் செய்து பரப்பி வருகின்றனர்.

எது எப்படியோ படத்திற்கு மகாராஷ்டிரா போலீஸ் உதவியால் இலவசமாக விளம்பரம் கிடைத்து விட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டாவுடன் கியாராவுக்கு காதல்?விஜய் தேவரகொண்டாவுடன் கியாராவுக்கு ... அனுஷ்காவுக்கு நன்றி: ஆலியா பட் அனுஷ்காவுக்கு நன்றி: ஆலியா பட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in