Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் நிரந்தரமான காமெடியன் யாரும் இல்லை

13 செப், 2019 - 00:56 IST
எழுத்தின் அளவு:
There-are-no-permanent-comedians-in-cinema

சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும், தன்னை வளர்த்து வரும் காமெடி நடிகர், இமான் அண்ணாச்சி உடன் ஒரு சந்திப்பு; அவருடன் பேசியதிலிருந்து:


உங்களைப் பற்றி?


துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள கிராமம் என் சொந்த ஊர். கிராமத்தில் வெட்டியாக சுற்றி வந்து, சினிமாவில் நடித்தே தீருவேன் என்ற ஆசையால், சென்னைக்கு வந்தேன்.சினிமாத் துறைக்குள் நுழைய என்னவெல்லாம் செய்தீர்கள்?
மற்ற யாரையும் நம்பாமல், என்னை மட்டுமே நம்பி, சென்னை வந்தேன். சினிமா ஆசை இருந்தாலும், எப்படி நுழைய வேண்டும் என எதுவும் தெரியாது. தள்ளுவண்டியில் காய்கறி விற்று, 18 ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். தொலைக்காட்சி வாயிலாக வெளி உலக மக்களுக்கு தெரிய ஆரம்பித்தேன். சில, டிவி சீரியல்களிலும் நடித்தேன். பிரபல தொலைக் காட்சியின் நிகழ்ச்சி மூலம், பிரபலமானேன். அதன்பின், சினிமாவுக்கு வந்தேன்.


உங்கள் பார்வையில் சின்னத்திரை, வெள்ளித்திரை...?
இரண்டுமே எனக்கு, இரண்டு கண்கள் மாதிரி. எந்த தொழிலாக இருந்தாலும், இறங்கி விட்டால், 100 சதவீதம் உழைப்பை தருவேன். தொலைக்காட்சியில் ஆரம்பித்த என் வாழ்க்கை, 100 சதவீத உழைப்பால் முன்னேறி வந்து கொண்டே இருக்கிறது.


இதுவரை நடித்த படங்கள்... நடிக்க போகும் படங்கள்?
இதுவரை, 65 படங்கள் நடித்து விட்டேன். எட்டு படங்களில் நடித்து வருகிறேன். ஏழு படங்களில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. கடவுள் புண்ணியத்தில், ஓய்வில்லாமல் உழைக்கிறேன்.


மறக்க முடியாத சம்பவங்களில் ஏதாவது?


ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒருவரது வீட்டில் சிக்கன், மட்டன், மீன் இவற்றில் எதை சமைப்பது என்ற கேள்வி எழுந்து, அதுவே சண்டையாகி விட்டது. கணவனும், மனைவியும் மாலை வரை பேசவே இல்லை; ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர். மாலையில், குழந்தைகளுக்கான என் நிகழ்ச்சியை, டிவியில் பார்த்தனர். நிகழ்ச்சி முடியும் போது, அனைவரும் கூடி அமர்ந்து, சந்தோஷப்பட்டனர். இதை, என் ரசிகர் ஒருவர் எனக்கு தெரியப்படுத்தினார்.


உங்களுடைய தனித்துவம் என்ன?


கவுண்டமணிக்கு கொங்கு தமிழ்; லுாஸ் மோகனுக்கு சென்னை தமிழ்; வடிவேலுவுக்கு மதுரை தமிழ் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு மொழி அடையாளமாக இருந்தது. நான் துாத்துக்குடி தமிழில் பேசுவது என் அடையாளமாக இருக்கிறது. நான் கோபப்பட்டு சண்டை போட்டால் கூட காமெடி என நினைத்து சிரிக்கின்றனர்.சினிமாவில் நிரந்தரமான காமெடியன் இல்லையே ஏன்?


சினிமாவில், வெற்றி பெற்ற குதிரை மீது தான், அதிக பார்வை இருக்கும். அந்த காலத்தில் இருந்தே இப்படித்தான். இப்போது ஒரு நடிகர் மேலே இருக்கிறார்; அடுத்தாண்டு வேறு ஒருவர் இருப்பார். தமிழ் சினிமாவில் நிரந்தரமான காமெடியன் யாரும் இல்லை. அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கிறது.எதிர்காலத்தில் இயக்குனர் ஆகும் ஆசை?அய்யோ ஆளை விடுங்க. நிறைய பேரின் நிஜ கதைகளை பார்த்தாச்சு. நமக்கு என்ன வருதோ, அதை செய்வோம்.


அரசியல் ஆர்வம்?தி.மு.க.,வில் இருக்கிறேன். தேர்தல் வந்தால், சீட் கேட்பேன். 234 தொகுதிகளில் எந்த தொகுதியில் வாய்ப்பு கிடைத்தாலும் போட்டியிடுவேன்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ரித்திகா சிங்இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ... மத்தவங்க காறி துப்புறாங்க.. லாஸ்லியாவை திட்டிய ரியல் அப்பா மத்தவங்க காறி துப்புறாங்க.. ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14 செப், 2019 - 02:59 Report Abuse
skv srinivasankrishnaveni நடிச்சோமா குடும்பத்தை காத்தோமா என்று இருக்கவேண்டும் please அரசியல் வேண்டாம் தம்பி உன்னை யூஸ் பண்ணிண்டுட்டு பிட்டாண்டியாக்கி மீண்டும் காய்விர்க்கவே அனுப்புவானுக அவ்ளோ சுயநலம் பிடிச்ச மனிதர்களே நிறைந்தது அரசியல் koottam
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
13 செப், 2019 - 14:09 Report Abuse
narayanan iyer வாழ்க்கையே நிரந்தரமில்லை . இதில் காமெடி நடிகர் மட்டும் என்ன சாஸ்வதமா ? அரசியலே வேண்டாம் அண்ணாச்சி . வடிவேலுவின் நிலையை தெரிந்தும் தி மு க வில் போட்டியிடுவேன் என்கிறீர்கள் .மக்களே பொறுங்கள் தூக்கி எறிந்துவிடாதீர்கள் .
Rate this:
kumzi - trichy,இந்தியா
13 செப், 2019 - 12:15 Report Abuse
kumzi சினிமாவே ஒரு சாக்கடை இதுல ஒனக்கு அரசியல் சாக்கடையும் வேணுமா
Rate this:
s t rajan - chennai,இந்தியா
13 செப், 2019 - 02:51 Report Abuse
s t rajan கடவுளின் அருளால் முன்னுக்கு வர நினைக்கும், நீங்கள் கடவுளை - நம்பா விட்டாலும் பரவாயில்லை - ஏசி, தில்லு முல்லு கலகம் (திமுக) செய்து கொள்ளையடிப்போருக்கு வக்காலத்து வாங்குறீங்களே ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in