Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார் படம் சிறப்பாக வந்துள்ளது - ரஜினிகாந்த்

12 செப், 2019 - 14:23 IST
எழுத்தின் அளவு:
rajini-about-darbar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித் துள்ள முதல் படம் தர்பார். இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா,நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில்ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜெயப்பூரில் நடைபெற்றது.

இந்த நிலையில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால் அவர் நேற்று சென்னை திரும்பினார். அதோடு நேற்றைய தினம் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஜினியிடம் தர்பார் படம் குறித்து மீடியாக்கள் கேட்டபோது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. பொங்கலுக்கு படம் கண்டிப்பாக திரைக்கு வருகிறது என்று தெரிவித்தார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயலலிதா கதையை படமாக்குவதா? -கெளதம்மேனனுக்கு எதிராக வழக்குஜெயலலிதா கதையை படமாக்குவதா? ... இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ரித்திகா சிங் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ramesh M - COIMBATORE,இந்தியா
14 செப், 2019 - 11:33 Report Abuse
Ramesh M ரஜினி ரசிகர் மெசேஜ் இல்ல. ஆனா அவரை எதிர்த்து மெசேஜ் போடுறவங்க மிஸ் பண்ணாம மெசேஜ் போடறாங்க. மற்றவர்களை விட அவரை எதிர்த்து மெசேஜ் போடறவங்க அவர் சம்பந்தமான மெசேஜ் கண்டிப்பாக பார்க்கிறார்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் போல. ஆனா இவர்கள் தான் ரஜினி மெசேஜ் தான் முக்கியமா மற்ற மெசேஜ் முக்கியமில்லையா என்று சொல்பவர்கள். இவர்களை பார்த்தால் சத்யராஜ் பண்ணுவது போலத்தான் உள்ளது. அவர்தான் கிடைக்கிற விளம்பரத்தில் எல்லாம் நடிக்கிறது ஆனால் விளம்பரத்தில் நடிக்காதவரை எல்லாம் விளம்பரம் என சொல்லி கேலி பண்ணி மக்களிடம் கைதட்டல் வாங்குவது. அவரை போன்று தான் இவர்களும்.
Rate this:
13 செப், 2019 - 14:11 Report Abuse
காளி இப்படி தான் 2.0 க்கு சொன்னிங்க .. பார்த்தா அது காஞ்சனா 4 மாதிரி ஹாரா .. சிட்டி குட்டின்னு காமெடியாயிருந்தது ...இப்போ தர்பார் ... வேணாம் தலிவா ரிட்டையர் ஆயிடு
Rate this:
tamil -  ( Posted via: Dinamalar Android App )
13 செப், 2019 - 04:25 Report Abuse
tamil second look poster patha serippu than varuthu.. ithula padam nala vanthurukam.hmm.. paapom
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in