Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பயில்வான் படத்திலிருந்து விலக நினைத்தேன்: சுதீப்

12 செப், 2019 - 13:55 IST
எழுத்தின் அளவு:
sudeep-says-that-he-will-leave-from-pailwan-movie

கிச்சா சுதீப் நடித்திருக்கும் கன்னட படம் பயில்வான், ஹெபுல்லி வெற்றிக்கு பிறகு சுதீபும், இயக்குனர் கிருஷ்ணாவும் இணைந்துள்ள படம். அகன்ஷா சிங் ஹீரோயின்.சுஷந்த் சிங், கபீர் துஹன் சிங், சரத் லோஹிதாஸ் ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா இசையமைக்க கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கன்னடத்தில் தயாராகி உள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் இன்று வெளியாகி உள்ளது.

படத்தில் நடித்தது பற்றி கிச்சா சுதீப் கூறியதாவது: பயில்வான்” படத்தில் நடித்தது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். இப்படத்தின் கதையை முதன் முதலில் கிருஷ்ணா கூறியபோது நான் அதன் மீது விருப்பமற்றே இருந்தேன். ஏனெனில் அந்த நேரத்தில் ஜிம்மையே நினைத்துப் பார்க்காத ஒருவனாக நான் இருந்தேன். மற்ற நடிகர்கள் போல் நான் ஒன்றும் ஃபிட்னெஸ் ஃப்ரீக் கிடையாது. உடற்கட்டுக்காக மெனக்கெடும் இப்படத்தின் பாத்திரத்தை ஏற்பது எத்தனை கடினம் என்பது எனக்குத் தெரியும்.


எனது உடல் எப்போதும் ஒல்லியான தன்மையுடடையது. அதனால் ஏன் நாம் இந்த கதாப்பாத்திரத்தை ஒரு சவலாக ஏற்கக்கூடாது என முடிவு செய்தேன். இந்தக் கதாப்பாத்திரத்திற்காக உடற்பயிற்சி கூடத்திலேயே தவம் இருந்தேன். 20 முதல் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தில் இருந்து விலகி விட நினைத்தேன். படத்தின் பாக்ஸிங் காட்சிகள் எனக்கு நிறைய காயங்களையும், அயர்ச்சியையும் தந்தது. ஆனால் இயக்குநர் கிருஷ்ணா என் மீது வைத்த அபார நம்பிக்கையும், படக்குழு தந்த உந்துதலும் என்னை உற்சாகப்படுத்தியது.


உடலை கட்டுக்குள் வைத்திருப்பது முடிகொட்டும் பிரச்சனை , மனமாற்றங்கள், டிப்ரெஷன் என பலவித துன்பங்களை கொண்டு வந்தது. ஆனால் இப்போது படத்தை முழுதாய் பார்க்கும்போது அடைந்த கஷ்டங்கள் அனைத்தும் வெறும் தூசாக தெரிகிறது. படம் அத்தனை மகிழ்ச்சியை தந்திருக்கிறது. என்றார்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சைரா: டப்பிங் பேசிய தமன்னாசைரா: டப்பிங் பேசிய தமன்னா மீண்டும் ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் மஞ்சு வாரியர் மீண்டும் ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in