'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | பிரசாத் ஸ்டுடியோவால் மன உளைச்சல் : விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு | மீனா விடுத்த சவால் | தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன் | குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி | 'மாஸ்டர்' - ஹிந்தியில் படுதோல்வியா ? | கமல் துவக்கி வைத்த 'கேங்ஸ்டர் 21' | தெலுங்கில் வெளியான நெடுநல்வாடை |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரில் ஜோடியாக நடித்தவர்கள் சஞ்சீவ், ஆலியா மானசா. அந்தத் தொடரில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின் டிவி நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர்களுக்குள் நிச்சயதார்த்தத்தையும் நடத்தி வைத்தார்கள்.
இந்நிலையில் நேற்று தங்களுக்குத் திருமணம் நடந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் சஞ்சீவ். “ஆம், பப்புவின் (ஆலியா மானசா) பிறந்தநாளில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். சில பிரச்சினைகளால் இதை அறிவிக்க முடியவில்லை. இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் தேவை,” என அதில் பதிவிட்டுள்ளார்.
ஆலியா மானசாவின் பிறந்தநாள் ஜுன் 3ம் தேதி. அப்போதே நடந்த திருமணத்தை நேற்றுதான் அறிவித்திருக்கிறார் சஞ்சீவ்.