Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேச்சுலர் - போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு

12 செப், 2019 - 12:12 IST
எழுத்தின் அளவு:
controversy-over-bachelor-movie-poster

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக 'அடல்ட் காமெடி' வகைப் படங்களை அவ்வப் போது தயாரித்து வெளியிடுகிறார்கள். இந்தக் கால இளைஞர்களை கவரும் விதமான படங்கள் என்று சொல்லிக் கொண்டு தவறான படங்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் அந்த முயற்சிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

சில திரைப்படங்களில் படங்களில் அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை என்றால் கூட ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஆபாசமான, தரமற்ற போஸ்டர்களை வெளியிடுவதையும் சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.


ஏற்கெனவே, ஆபாசப் படமான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் நடித்து தன் இமேஜைக் கெடுத்துக் கொண்ட ஜி.வி.பிரகாஷ்குமார், கடந்த வாரம் வெளிவந்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் வரவேற்பு மூலம் தன் இமேஜை உயர்த்திக் கொண்டார். அதன் ஈரம் காய்வதற்குள் 'பேச்சிலர்' என்று அவர் அடுத்து நடிக்கப் போகும் படத்தின் போஸ்டர் மூலம் அந்த இமேஜை கெடுத்துக் கொண்டுள்ளார்.


ஒரு பெண்ணின் தொடைகளுக்கு இடையில் அவர் தலை வைத்திருக்கும் அந்த போஸ்டருக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தன்னை ஒரு சமூக ஆர்வலராகவும் காட்டிக் கொள்ளும் ஜி.வி.பிரகாஷ் சமூகத்தை சீர்குலைக்கும் இப்படியான போஸ்டருக்கு எப்படி போஸ் கொடுத்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
அதிக விலைக்கு விற்கப்பட்ட 'பிகில்' தெலுங்கு உரிமைஅதிக விலைக்கு விற்கப்பட்ட ... அதிகமாக டிரோல் செய்யப்படும் தர்பார் இரண்டாவது பார்வை அதிகமாக டிரோல் செய்யப்படும் தர்பார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

sriwilli - jakarta,இந்தோனேசியா
17 செப், 2019 - 10:26 Report Abuse
sriwilli நல்ல வேளே . தலைக்கு பதிலா .......
Rate this:
mohan - chennai,இந்தியா
16 செப், 2019 - 17:09 Report Abuse
mohan பாக பிரிவினை, சக்கரவர்த்தி திருமகள். கலங்கரை விளக்கம், போன்ற படங்கள் நாட்டிற்கு, நல்ல விசயத்தை சொல்லி கொடுத்தன... ஆனால் இப்பொழுதுள்ள படங்கள், ஆபாசம் ஒன்றையே சொல்லி கொடுக்கின்றன...பழைய படங்களின் நகைசுவை காட்சிகள் கூட அறிவியலையும், கணக்கையும் சொல்லி கொடுத்தன.. இப்பொழுதுள்ள நகைசுவை காட்சிகள், இளைய சமுதாயம் தீய வழிகளில் கெட்டு போக சொல்லி கொடுக்கிறது...
Rate this:
mohan - chennai,இந்தியா
16 செப், 2019 - 17:04 Report Abuse
mohan அது தான் ஒரு பட தலைப்பையே , சார் உங்கள போடணும்... இதற்கு எப்படி அரசு அனுமதி கொடுக்கிறது... மக்கள் புறக்கணித்தால் எல்லாம் சரியாய் போயி விடும்.. மக்களுக்கு அந்த அளவுக்கு பொறுப்பு இல்லையே... என்ன செய்வது...
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 செப், 2019 - 12:46 Report Abuse
Ramesh R காசு கொடுத்தால் எதுவும் செய்வார்கள் நம் நடிகர் நடிகைகள். சமுதாயம் கெட்டு போனால் என்ன - அவர்கள் கல்லா நிறைந்தால் போதும் - என்ன மக்கள்? சீ
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15 செப், 2019 - 22:29 Report Abuse
A.George Alphonse மகா கேவலமான பிழைப்பு.இதெல்லாம் ஒரு படம் அதுக்கு இது போன்ற மட்டமான கேவலமான கருத்துகளும் ,எதிர்ப்புகளும்தகுந்ததே.போஸ்டருக்கே இப்படி படம் ரிலீஸ் ஆனா எப்படியோ.
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in