Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முத்தையா முரளிதரன் பயோபிக் - என்ன செய்யப் போகிறார் விஜய் சேதுபதி ?

11 செப், 2019 - 10:01 IST
எழுத்தின் அளவு:
Muralitharan-biopic:-What-Vijaysethupathi-to-do?

இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்று பல சாதனைகளைப் புரிந்தவர் முத்தையா முரளிதரன். அவர் எப்போதுமே விடுதலைப்புலிகளுக்கு எதிராக பேசுபவர். அவரது பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. உடனேயே, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்கள், முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.

தற்போது இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் ராஜபக்சே தம்பி கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொண்டு முரளிதரன் பேசியுள்ளார். இது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர்தான் முன்னாள் அதிபர் ராஜபக்சே. அவருடைய தம்பிக்கு ஆதரவாக தற்போது பிரச்சாரம் செய்து வரும் முரளிதரனையும் பலர் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவரது பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என மீண்டும் குரல்கள் எழுந்துள்ளன. தமிழ் சினிமாவில் தமிழர்களுக்கு ஆதரவானவர்களாக தன்னை காட்டிக் கொள்ளும் விஜய் சேதுபதி இப்போது அந்தப் படம் குறித்து ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சபாஷ் நாயுடுவால் தலைவனுக்கு வந்த சங்கடம்சபாஷ் நாயுடுவால் தலைவனுக்கு வந்த ... இளையராஜா இசை: ‛துப்பறிவாளன் 2' அறிவிப்பு இளையராஜா இசை: ‛துப்பறிவாளன் 2' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
12 செப், 2019 - 00:06 Report Abuse
orange mittai முரளிதரனுக்கு எதுக்கு biopic ஏதாவது இலங்கைக்காரன் நடிப்பான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in