Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாஹோ - வசூல் ஓஹோ, லாபம் அச்சச்சோ...

11 செப், 2019 - 08:59 IST
எழுத்தின் அளவு:
Saaho-fails-at-box-office

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பிரபாஸின் பிரம்மாண்டமான படம் 'சாஹோ' என அதை ஆரம்பித்த நாளிலிருந்தே மிரட்டலாக சொல்லி வந்தார்கள். படம் வெளிவந்த பின் கதையே இல்லையே என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் சொன்னார்கள். இதற்கு அவ்வளவு பெரிய பில்ட்அப் என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இருந்தாலும் ஹிந்தி ரசிகர்களுக்கு ஏனோ படம் பிடித்துப் போய்விட்டது. அங்கு மட்டும் 100 கோடியைத் தாண்டி படம் வசூலித்து லாபத்தைக் கொடுத்திருக்கிறது. தெலுங்கில் எடுக்கப்பட்ட படம் தெலுங்கு பேசும் மாநிலங்களிலேயே லாபத்தைக் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. எப்படியும் படத்திற்கு நஷ்டம் வரும் என்பதுதான் தற்போதைய நிலைமை.

தெலுங்கு பேசும் மாநிலங்கள் தவிர, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, வெளிநாடுகள் ஆகிய இடங்களிலும் படம் நஷ்டத்தை சந்திக்கப்போவது உறுதி என்பதே திரையுலகத் தகவல்.

படத்தை மிகப் பெரும் விலைக்கு விற்றதால்தான் இந்த நஷ்டம். சுமார் 300 கோடி ரூபாய் வரை இப்படத்திற்கான வியாபாரம் நடந்தது. 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தால்தான் இதர செலவுகள் போக லாபத்தைக் கணக்கிட முடியும். ஆனால், தற்போது வரை 400 கோடியை வசூல் நெருங்கியுள்ளது. படம் வெளியாகி பத்து நாட்களாகிவிட்டதால், இதற்கு மேல் வசூலிக்க வாய்ப்பில்லை என்பதே நிலைமை.

ஏரியாவைப் பொறுத்து நஷ்ட விவரம் மாறுபடும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டிஜிட்டல் உரிமையில் அசத்திய 'சை ரா'டிஜிட்டல் உரிமையில் அசத்திய 'சை ... சபாஷ் நாயுடுவால் தலைவனுக்கு வந்த சங்கடம் சபாஷ் நாயுடுவால் தலைவனுக்கு வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in